JIO Feedback

​நேற்று சுமார் 1.30 மணி நேரம் , இன்று காலை ஒரு மணி நேரம் , இதோ இப்போது ஏறத்தாழ 40 நிமிடங்கள் ரிலையன்ஸ் ஜியோ Customer Care/Complaint Helplineயிடம் பேச முயற்சி செய்து க ொண்டு இருக்கிறேன், ஒட்டுமொத்தமாக சுமார் 3 மணி நேரத்தை செலவழித்து விட்டேன் வெறும் பாட்டு ஓடுகிறதே தவிர அவர்கள் போனை எடுப்பதாக இல்லை.
3மாதம் High speed Unlimited Internet என அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நம்பியே இந்த கேடுகெட்ட, சந்தையில் விலை போகாத LYF போனை வாங்கினேன், வாங்கி ஒரு மாதம் முடிந்த நிலையில் , அனைவருக்கும் சிம் இலவசம் என்றார்கள் அப்போவே என்னுடைய 3000 வீணாகிவிட்டது , இருந்தும் பரவாயில்லை யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என மனதை தேற்றி கொண்டேன்.

இப்போது அடுத்த இடியாக செப் 5 முதல் தினமும் 4 ஜிபி மட்டுமே 2Mbps speed , 4 ஜிபிக்கு மேல் 128 Kbps என புது விதியை கொண்டு வந்து இருக்கிறார்கள். இது முற்றிலும் அவர்கள் கொடுத்த வாக்குறுதிக்கு எதிரானது, எனது சலுகை காலம் இன்னும் 2 மாதங்கள் இருக்கிற சூழலில் இப்படியான விதி என்னை போன்று லைப் போன் வாங்கிய லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயல்.

நானாவது பரவாயில்லை 3000 கொடுத்து வாங்கினேன் பலர் 5000, 6000 ஏன் 12000 கொடுத்து கூட இந்த கருமத்தை வாங்கி இருக்கிறார்கள். 500 ரூபாய் கூட பெறாத இந்த போனை முறையே 3000, 4000, 5000 என லட்சக்கணக்கான மக்களிடம் விற்று, அதில் வந்த வருமானத்தை வைத்து கோடி பேருக்கு இலவச சிம் என விற்க போவதும், 3 மாதம் Unlimited High Speed Internet என விளம்பரம் செய்து இப்போது சத்தமில்லாமல் 128 Kbps ஆக மாற்றி இருப்பதும் தான் ஜியோவின் அரசியல்.

நெட் தான் இப்படி என்றால் கால்கள் இதுக்கும் மேல், ஆரம்பம் முதலே ஜியோ சிம்மில் இருந்து ஏர்டெல், வோடபோன் போன்ற நெட்வொர்க்களுக்கு கால் செய்தால் போகாது. எப்போது கால் செய்தாலும் ‘இந்த லைன்கள் இப்போது பிசியாக உள்ளன’ என்ற ஒரு வெட்கம் கெட்ட வாய்ஸ் ஓவர் மட்டுமே வரும்.

மொத்தத்தில் Very poor connectivity , High probability of call drops, very very very bad customer service, same data rates as Airtel என மற்ற நெட்வொர்க்கை விட அனைத்து வகையிலும் ஜியோ ஒரு குப்பை.

ஜியோ சிம்மை ஒன்றுக்கு நான்கு முறை யோசித்து வாங்குங்கள் , லைப் போனை வாங்கவே வாங்காதீர்கள்.

#அதிகம் பகிரவும் ! #Please Share ….

#RelianceJio #WorstNetwork #FakePromise #Alert

Leave a Reply