​தமிழ்நாடு பொதுப்பணித்துறை இனி தேறுமா

​தமிழ்நாடு பொதுப்பணித்துறை இனி தேறுமா?…
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻  
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளத்திலுள்ள 24 மதகுகளும் சீரமைக்கப் படாமல் கிடக்கிறது…
இதனால், வரும்  பருவ மழையால் நிரம்பும் தண்ணீர் குளத்திலிருந்து வீணாக வெளியேறும் அவலத்தில் உள்ளது. 
சென்ற வருடமும் மழை காலத்தில் இந்த மதகுகள் சரியாக பராமரிப்பு செய்யப் படாததால், ஏராளமான தண்ணீர் வீணாக வெளியேறியது. அப்போது மதகுகளின் இடைவெளிகளை விவசாயிகள் சாக்குகளை வைத்து ஓரளவு தண்ணீரை கட்டுபடுத்தினர்.

          

எனவே, இந்த ஆண்டும் பருவ மழை தொடங்கும் முன்பு, முன்னேற்பாடாக மேற்படி மதகுகளை சீரமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.   
மேலும், கண்மாயின் மேல் இரும்பு பிளேட்டால் ஆன  நடைபாதையில் பல இடங்களில் ஓட்டை விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ளது. 
இதையும் அவசரமாக செப்பனிட வேண்டும் என கடந்த  திங்களன்று  காந்திய சேவா மன்ற நிறுவனரும், தூத்துக்குடி ஒன்றிய முன்னாள் கவுன்சிலருமான என். வி.ராஜேந்திரபூபதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

            

இந்நிலையில், பொதுப்பணித்துறையினர் நேற்று, இன்றும் 24 மதகுகளின் இடைவெளிகனை இணைப்பு ரப்பருக்கு பதிலாக சாக்குகளை கொண்டு  அவசர அவசரமாக  அடைத்துள்ளனர். 
தற்போது ரப்பர் ஸ்டாக் இல்லையென்றும், ஆர்டர் கொடுத்துள்ளோம் என்றும் சம்பந்தபட்ட அதிகாரி  இன்று தெரிவித்தார்.
*முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் எவ்வளவு அலட்சியம் பாருங்கள்.* 
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

Leave a Reply