​ஜனத்தொகையை குறைக்க இதுவும் ஓர்வழி

செங்கீரை..

உணவில் கட்டாயம் சேர்க்க படவேண்டிய ஊட்டச்சத்து, வைட்டமின் நிறைந்த கொழுப்பு இல்லாத ஒர் உணவு கீரை..
இதை வேக வைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் இன்னும் சிறப்பு என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்..
ஆனால் இந்த கீரை எப்படி விளைவிக்கபடுகிறது என்று  கொஞ்சம் விரிவாக பார்ப்போமே..
நேற்று காலை நான் கண்ட காட்சி ..
ஒரு ஏக்கர் செங்கீரை பயிருட்டுள்ளார் 

ஓர் விவசாயி..
விதை தெளித்து முளைத்தவுடன் 

சத்து டானிக் என்று விவசாயின் கையில் நஞ்சை கொடுத்து முதல் பிள்ளையார் சுழி போடுகிறார்கள் பூச்சிக்கொல்லி கடைக்காரர்கள்..
அடுத்த ஏழு நாட்களில் முதல் பூச்சிகொல்லி தெளிக்கபடுகிறது இந்த கீரையின் மீது..
அடுத்தடுத்து இப்போதுவரை(15 நாளில்)

மூன்று முறை நஞ்சு தெளிக்கப்பட்டுள்ளது..
அறுவடைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இன்னும் இரண்டு முறை பூச்சிக்கொல்லி தெளித்தாகவேண்டும் என்று அக்ரி கூறிச்சென்றுள்ளாராம்..
நவீன விவசாயி வால்ட்டர், 

பத்ரி சேஷாத்திரி, 

MS சுவாமிநாதன் போன்ற பசுமைபுரட்சி 

ஆதரவாளர்கள் இப்படி விளைந்த கீரையை சாப்பிடுவார்களா?
கட்டாயம் மாட்டார்கள்..
காரணம் இவர்கள் பன்னாட்டு பூச்சிக்கொல்லி கம்பெனிகளின் கைக்கூலிகள்..
அந்த நஞ்சுக்களை சாப்பிட்டால் என்னவாகும் என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்..
நஞ்சு நல்லது என்று இவர்கள் கூறுவது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நம்மை ஏமாற்ற மட்டுமே..
இந்த வகை கீரைகளை சாப்பிடுவது நம்மை போல உள்ள நடுத்தர வர்கத்தினர்தான்..
இந்த விவசாயி தெளித்தது ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லி,
இவர் தெளித்தது இரண்டு சதவீதம் மட்டுமே பூச்சிகளின் மீது படுகிறது..
மற்ற 98 சதவீதம் நிலத்திலும், நீரிலும், கீரையிலும், காற்றிலும் கலந்து நேரடியாக மனிதனை பாதிக்கிறது..
இந்த ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லி 2060ஆம் ஆண்டு சந்தைக்கு வரவேண்டிய பூச்சிக்கொல்லி..
ஆனால் 2015 லே வந்து விட்டது..
படு வேகமான விஞ்ஞான வளர்ச்சிதான் இதற்கு மூலகாரணம்..
ஒரு மனிதன் நூற்றுஐம்பது மில்லி பூச்சிக்கொல்லியை குடித்துவிட்டால் உடனடி மரணம்தான்..
ஆனால் இது போல நஞ்சு தெளிக்கபட்ட உணவுகளை தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் சாப்பிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு உறுப்பு பாதிபடைந்து நடை பிணமாகத்தான் வாழவேண்டும்..
நகரவாசிகளே..
வெறும் நிறத்தை மட்டம் பார்த்து எந்த உணவு பொருட்களையும் வாங்காதீர்கள்..
அதில் அத்தனையும் நஞ்சு கலக்கபட்டு இருக்கிறது…
கீரையிலே இவ்வளவு நஞ்சு என்றால்,

மற்ற உணவு பொருட்களில்..??
இயற்கையில் விளைந்தது கொஞ்சம் நிறம் குறைவாக இருந்தாலும் அத்தனையும் அமுது..
முடிந்தவரை நீங்களே காய்கறிகளை  உற்பத்தி செய்து கொள்வது நல்லது..
இப்ப சொல்லுங்க,

கேரள அரசு தமிழ்நாட்டில் இருந்து வரும் காய்கறிகளை ஏன் தடை செய்கிறது என்று..

Leave a Reply