​சூரியகாந்தி எண்ணெய் மோசடி

​சூரியகாந்தி எண்ணெய் மோசடி …ஒரு உயிர் கொல்லும் விஷம் 
தற்போது நீங்கள் சன்பிளவர் எண்ணெய் என்று உபயோகித்து வரும் எந்த எண்ணையும் சூரியகாந்தி எண்ணையே இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா ..!?

=======================================

கடலெண்ணல சமச்சிகிட்டு இருந்த மக்களை பயமுறுத்தி 90 களில் சபோலா விளம்பரம் வந்தது.அதாவது ஒரு குடும்பத்தலைவருக்கு மாரடைப்பு வந்து அவரை ஐசியுவுக்கு அழைத்துசெல்லப்படுகிறார்.அவரது குடும்பம் கண்ணீரோடு பார்க்கிறது..சபோலா எண்ணெய் யூஸ் பண்ணுங்க.மவனே இல்லாட்டி இதான் கதின்னு மறைமுகமா மிரட்டும் தொனியில் அந்த விளம்பரம் இருந்தது.

====================================

பிறகு மொத்த நாடும் சூரியகாந்தி எண்ணைக்கு மாறியது(மாற்றப்பட்டது).அப்போ ஐசியுவுக்கு எந்த மாரடைப்பு கேசும் போகவே இல்லியா?

காலம் காலமாக ஒரு உணவுப்பொருளை விக்க வேண்டியது.திடீர்னு “இத்தினி நாளா இதுல %#$%#$%# நச்சுப்பொருள் கலந்திருந்தது.நாங்கள் விற்கும் ப்ராடக்டில் அந்த நச்சுப்பொருள் நீக்கப்பட்டுள்ளது” என அதை கூடுதல் விலைக்கு விக்க வேண்டியது..
70 களில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பெருமளவில் சூரியகாந்தி , சோயா போன்றவை உற்பத்தி செய்யப்பட்டது . அவற்றை சந்தைப்படுத்த இந்தியா போன்ற வளரும் நாடுகள் தேவைப்பட்டது . எனவே இங்கு பாரம்பரியமாக உபயோகித்துவந்த கடலை எண்ணெய் , தேங்காய் எண்ணெய் போன்றவை கெடுதல் என விளம்பரம் செய்யப்பட்டது . அதிக அளவில் சூரிய காந்தி எண்ணெய் உபயோகிப்பது ஊக்குவிக்கப்பட்டது .
இதே போல 90 களில் மலேசியா , இந்தோனேசியாவில் விளையும் பாமாயில் நம் ஊரில் நுழைந்தது . நம் பாரம்பரிய எண்ணெய்கள் போய் , இவைகளை உபயோகிக்க மக்களை பழக்கிவிட்டார்கள் .
இந்நிலையில் கடந்த ஓராண்டாக உலக அளவில் சூரியகாந்தி உற்பத்தி பாதியாக குறைந்துவிட்டது. நம் ஊரிலேயே ஒரு கிலோ சூரியகாந்தி விதை 100 ரூபாய்க்கு மேல் போய்விட்டது . அதில் இருந்து எண்ணெய் எடுத்தால் லிட்டர் 150 ரூபாய்க்கு மேல் விற்கவேண்டும் . ஆனால் ஒரு லிட்டர் 80 ரூபாய்க்கு எப்படி விற்கிறார்கள் .
பாமாயிலை சில கெமிக்கல்கள் சேர்த்து சுத்திகரித்து பெறப்படும் எண்ணெய் சூப்பர் ஒலின் எனப்படுகிறது. நீர் போல இருக்கும் இந்த எண்ணையை எந்த எண்ணையுடன் கலந்தாலும் கண்டுபிடிக்க முடியாது. அதே போல பருத்தியில் இருந்து எடுக்கப்படும் காட்டன் ஸீட் ஆயிலும் எந்த எண்ணெயிலும் கலக்கமுடியும்.
சனிபிளவர் ஆயில் சுத்தமாக கொடுத்தால் லிட்டர் 180 முதல் 200 வரை விற்றால் மக்களிடம் அரசுக்கு எதிராக பெரிய கொந்தளிப்பு ஏற்படும் . எனவே சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் வேறு சமையல் எண்ணையை விற்க அரசு மறைமுகமாக அனுமதி அளித்துள்ளது .
இன்று நீங்கள் வாங்கும் எந்த சூரியகாந்தி எண்ணெயிலும் 80 சதவீதம் சூப்பர் ஒலின் , காட்டன் ஆயில் , சோயா எண்ணெய் போன்றவையும் 20 சதவீதம் அளவிற்கே சன்பிளவர் ஆயிலும் இருக்கும்
நம் பாரம்பரிய எண்ணெய்களான நல்லெண்ணெய் . கடலெண்ணெய் , தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அப்படியே உபயோகிக்க முடியும். ஆனால் சன்பிளவர் , சோயா , காட்டன் , பாமாயில் … எல்லாமே ஆசிட் , கெமிக்கல் போட்டு ரீபைண்ட் செய்து மட்டுமே உபயோகிக்க முடியும்.

Leave a Reply