​கன்ப்யூசன் ஆப் இந்தியா

​கன்ப்யூசன் ஆப் இந்தியா..(கொஞ்சம் சிந்திப்போம்…) எங்கயோ போய்டோம் போங்க..

.

ஒரு நாட்டின் அரசன் தன் ஆட்சியின் கீழ் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனரா என்பதை அறிய , அமைச்சரிடம் ஆலோசனை கேட்டார். மாறுவேடத்தில் நகர் வலம் சென்று மக்களின் நிலை அறிய யோசனை கூறினார் அமைச்சர். முதல் நாள் அரண்மனை நாவிதன் வீட்டுக்கு சென்று இந்நாட்டை ஆளும் மன்னன் மற்றும் மக்கள் பற்றி விசாரித்தார். நாவிதன் மன்னனிடம் நாட்டில் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.. ஆனால் மன்னன் சொகுசாக வாழ்வதாக கூறினான். கவலையில் ஆழ்ந்தார் மன்னர். இதை உணர்ந்த அமைச்சர் மன்னனுக்கு உண்மை உணர்த்த நாவிதன் இல்லத்தில் பொற்காசுகளை போட்டு விட்டு, மறுநாள் மன்னருடன் நாவிதர் வீட்டுக்கு சென்றார். அங்கே பொற்காசுகள் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த நாவிதனிடன் இன்று நாட்டு மக்கள் நிலை என்ன என்று அமைச்சர் கேட்டார். அதற்கு நாட்டில் அனைவரும் வசதியாக இருப்பதாக கூறினான் நாவிதன்.. நம் நாட்டின் நிலையும் இதுதான்..( சொகுசு கார்ல போற அரசியல்வாதிக்கு எங்க புரியும் எங்க நிலமை)

.

 இன்னும் சில வருடங்களில் அணு ஆயுத சோதனையில் சீனாவை மிஞ்சிவிடும் ,தகவல் தொழில் நுட்ப்பத்தில் உலக நாடுகளின் முன்னோடியாக மாறிவிடும், உலக பணக்காரர் வரிசையில் 7 வது இடம், கோடிகளில் புரளும் ஜாம்பவான்கள், மக்களின் எண்ணிக்கை விட வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் வீதியில்.. 113 பேர் கலந்து கொண்ட ஒலிம்பிக்கில் 2 பதக்கம்  … இதை வாங்க ஆன செலவு 100 கோடி… பதக்கம் வென்றவர்களுக்கு அன்பளிப்பு 20 கோடிகளுக்கும் மேல்.. இனி வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை. நாம் தான் வளர்ந்து விட்டோமே பெருமை பட வேண்டிய விசயம்.. நிற்க.

.

மனைவியின் உடலை எடுத்து செல்ல வாகனம் தர மறுத்ததால் 10 மைல் தன் தோலில் சடலத்தை சுமந்த கணவன்..

பிரசவித்து 5 நாளே ஆன பெண் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது இறந்ததால் நடு காட்டில் குழந்தையுடனும் மனைவியின் சடலத்துடனும் இறக்கி விடப்பட்ட கணவன்…

ரயிலில் அடிபட்டு இறந்த மூதாட்டியை கொண்டு செல்ல வாகனம் இல்லாததால் மகன் கண் முன்னே மூதாட்டியை  இரண்டாக ஒடித்து சாக்கில் போட்டு மூட்டை கட்டிய கொடுமை.. இது பாரத நாட்டில் அரங்கேறிய கொடுமை தான்.

நாட்டின் வளர்ச்சி என்பது அடித்தட்டு மக்களையும் சேர்த்து அல்லவா கணக்கில் கொள்ள வேண்டும்… அன்றாட தேவைகளை கூட நிறைவேற்ற வழி இல்லாத மக்கள்.. அரசு சலுகைகள் கூட அதிகாரம் உள்ளவர்களுக்கே.. உலகிற்கு சோறு போடும் விவசாயி கடனை அடைக்க முடியாத போது கழுத்தில் துண்டு போட்டு கேட்கும் அரசாங்கம், 7000 கோடியை ஏமாற்றியவனையும் .. கோடிகணக்கில் கடன் வாங்கியவனையும் கேட்க தயங்குவது ஏன்.. பணக்காரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம், அப்படி என்றால் கார், வீடு என அனைத்தும் உள்ள நான் யார்? இது எல்லாம் கடன் தானே? நன்றாக இருக்கிறோம் என்ற பெயரில் நம்மை நாமே ஏமாற்றி கொள்ளும் நடுத்தர வர்க்கம் நாம்..  மேற்கூறிய கதையில் உள்ள நாவிதர் போல் தான் நம் ஆட்சியாளர்கள் … மேல்தட்டு மக்களை வைத்து ஒட்டு மொத்த இந்தியாவையும் கணித்து விடுகின்றனர்.. ஒவ்வொரு குடும்ப தலைவன் தலையிலும்  கிரெடி கார்ட் , டெபிட் கார்ட், வீட்டு கடன், வாகன கடன் லொட்டு லொசுக்கு என அப்பப்பா…. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 77 வது இடம்.. சோற்றுக்கு வழி இல்லாத எத்தியோப்பிய மக்கள் 27 வது இடம்.. இப்ப சொல்லுங்க நாம எங்க போய்ட்டு இருக்கோம்……                 இப்படிக்கு

…..                     …………..         Kokila Priya..

FB Share

Leave a Reply