ஸ்ரீராம் ஜெனரல் இன்ஸூரன்ஸ் நிறுவனம்

ஒரு பயணி அவர் மேற்கொள்ளவிருக்கும் ரயில் பயணத்திற்காக வாங்கும் பயணச்சீட்டு என்பது ஒரு சட்டரீதியான ஒப்பந்த பத்திரமாகும். பயணச்சீட்டு வாங்கிய பயணியை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதற்கு ரயில்வேத்துறை உறுதி அளிக்கிறது என்பதே இந்த ஒப்பந்த்த்தின் சாரமாகும். இதற்கான மறுபயன்தான் பயணக்கட்டணம். இந்தச் சேவையில் குறைபாடு ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்வதோ, உரிய இழப்பீடு வழங்குவதோ ரயில்வேத் துறையின் கடமையாகும். இத்தகைய விவகாரங்களை கவனிப்பதற்காக “ரயில்வே கிளைம்ஸ் டிரைப்யூனல்” (http://www.rct.indianrail.gov.in/) என்ற அமைப்பும் உள்ளது. 
தற்போது ரயில் பயணத்திற்கான டிக்கெட் வாங்கும்போது, தனியாக காப்பீடு செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இணையம் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது இதற்கான வசதி இருக்கிறது. ஸ்ரீராம் ஜெனரல் இன்ஸூரன்ஸ் நிறுவனம் இந்த காப்பீட்டை தருகிறது. 
அப்படியானால் பயணிகளின் பாதுகாப்பிற்கு உறுதி அளிக்க முடியாத நிலைக்கு ரயில்வேத்துறை தள்ளப்பட்டிருக்கிறதா? இதுவரை பயணிகளின் இழப்பிற்கு அளித்துவந்த இழப்பீட்டை இனி ரயில்வேத்துறை இனிமேல் அளிக்காதா?? அரசுத்துறையிலேயே நான்கோ – ஐந்தோ ஜெனரல் இன்ஸூரன்ஸ் நிறுவனங்கள் இருக்கும்போது ஏன் ஒரு தனியார் நிறுவனத்திற்கு இந்த வாய்ப்பை அளிக்க வேண்டும்???

Leave a Reply