வலியை  உணர்வீர்கள்

​இன்று போலீஸ் சொன்ன மின்சார ஒயர் கதைகள் நமக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை… ஆனால் ஒருநாள்…
எந்தக்காரணமும் இல்லாமல்.. சம்பந்தமே இல்லாமல்.. ஒரு  சாதாரண போலிஸ்காரன் அதிகார திமிரில் சப்பென உங்களை அறையும் சூழ்நிலையின் போது… அந்த  வலியின்  உணர்வில்  தான் ராம்குமார் தன் தரப்பு நியாயம் சொல்ல வாய்ப்பில்லாமல் போன  வலியை  உணர்வீர்கள்… 
கொலை செய்தவன் என்றால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.. ஆனால் படித்த உடனேயே தெரியுது இது முழுக்க கதைன்னு.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் உண்மையை சொல்லிவிடும் என்று எல்லாருக்கும் தெரியும்.. ஆனால் அந்த உண்மை ஒரு நாளும் வெளியே வராது என்பதும் எல்லாருக்கும் தெரியும். அதையும் மீறி வந்தா அந்த டாக்டரும் தேவை இல்லாம ஒயரை  கடிச்சு தற்கொலை  பண்ணுவாரு.. நமக்கு ஏற்கனவே கரண்ட் பற்றாக்குறை.. இதெல்லாம்  தேவையா..
இப்படி  நடப்பது ஒன்றும் புதிதல்ல.  அதிகாரங்கள் தவறாக பயன்படுத்த பட்டதற்காக இதுவரை எந்த ஒரு பெரிய தண்டனையும் யாருக்கும் கிடைத்ததில்லை என்கிற மன தைரியம்  தான் காரணம். ஸ்காட்லான்ட் யார்டுக்கு நிகரான போலீஸ்.. அதில் சந்தேகம் இல்லை.. ஆனால்  சட்ட ஒழுங்கை  யார் யாருக்காகவோ  வளைந்து குடுத்து கையாளும் விதம் தான் தவறு..
நாளை இதுவே நம்மை சேர்ந்தவர்கள் ஒருவருக்கு கூட நடக்கலாம்… அன்று தான்  நமக்கு அந்த வலி புரியும் என்பது  தான்  நிதர்சனமான  உண்மை. அன்றும் நம்மை  பார்த்து இந்த உலகமே ஒரு ஸ்டேட்டஸ் போட்டு டைம் பாஸ் பண்ணிவிட்டு போய் கொண்டே இருக்கும்.. 
“மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர் மக்களை ஆட்சி செய்வதற்கு பெயர் தான் மக்களாட்சி” என ஐந்தாம் வகுப்பில் வாழ்க்கையியல் பாட புத்தகத்தில் படித்த போது இருந்த கற்பனைக்கும் நிஜ உலகின் மக்களாட்சிக்கும் எவ்வளவு வித்தியாசங்கள்…..

Sadheesh

Leave a Reply