பேரவைத்தலைவர் அவர்களே

“பேரவைத்தலைவர் அவர்களே!
யாரு… திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசா? என்ன பேசப்போறீங்க?
புதுக்கோட்டையின் தண்ணீர் பிரச்சினை பற்றி…
அதுக்கெல்லாம் அனுமதி இல்ல..உட்காருங்க..
மாண்புமிகு இதயதெய்வம் தங்கத்தாரகை புரட்சித்தலைவி தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அம்மா அவர்களே… போனாப்போகுது பேரவைத்தலைவர் அவர்களே!
யாரு கருணாஸா? என்ன பேசப்போறீங்க?
அம்மா பாட்டுதேன்….
என்ன….
நீங்க நல்லா இருக்கோணும் -பாட்டு பாடப்போறேன்…
அருமை… முழுப்பாடலையும் பாடும்படி அம்மாவின் பாதங்களை பணிந்துவிட்டு உங்க கிட்ட கேட்டுக்கறேன்..”
திமுக உறுப்பினர்கள் ஆட்சேபம்
“சபையை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள்- ஒருதரம்

சபையை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள்- ரெண்டுதரம்

சபையை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள்-மூணுதரம்..
நான் பலமுறை(?! )கேட்டுக் கொண்டும் சபையை ஜனநாயக (?!) முறைப்படி நடத்த திமுகவினர் ஒத்துழைப்பு தராததால் அவர்களை ஒட்டு மொத்தமாய் வெளியேற்றும்படி சபைக்காவலர்களுக்கு உத்தரவிடுகிறேன்.
அம்மா படம் போட்ட மோதிரம் அணிந்த காவலர் முன் வரிசைக்கு வரவும்.
திமுகவினரை வெளியேற்றிய கையோடு லவுட் ஸ்பீக்கர் வால்யூமை அதிகரிக்கவும் கருணாஸ் நீங்க பாடுங்க…
�#�ஷ்ஷபா�…. சபா நாயகரா இருக்கறது எம்புட்டு சிரமம்….
நன்றி: Uma Magi

Leave a Reply