பெங்களூருவிலிருந்து சென்னைக்கு இடம்மாற முன்னணி நிறுவனங்கள் ஆலோசனை

பெங்களூருவிலிருந்து சென்னைக்கு இடம்மாற முன்னணி நிறுவனங்கள் ஆலோசனை….. சாப்ட்வேர் நிறுவனங்கள் கொடுக்கும் ஷாக்….
இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றும், தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என்றும் பெங்களூரு அழைக்கப்படுகிறது. உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களான இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி, விப்ரோ உள்ளிட்ட பல நிறுவனங்கள், பெங்களூருவில் இயங்கி வருகிறது. சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்,
மெட்ரோ சிட்டிகளிலேயே மிக இதமான சீதோஷ்ணநிலை உள்ள நகரம் பெங்களூரு என்பதால், ஐடி நிறுவனங்கள் பெங்களூருவை தேர்வு செய்து, தங்களது கிளைகளை இங்கு நிறுவியுள்ளது.
இந் நிலையில் காவிரி பிரச்சினை காரணமாக, பெங்களூருவில் கலவரம் வெடித்தது. மொழி வெறியுடன் கன்னடர்கள் நடத்திய போராட்டத்தால், அனைவரும் கன்னடர்களை வெறுப்புடன் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், மாநிலத்தில் வன்முறையில் கன்னட அமைப்பினர் இறங்கினர். ஒரு வாரமாக இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
காவிரிப் பிரச்சினையும் தீரப்போவதில்லை. இதனால் கலவரமும் ஓயப்போவதில்லை என்ற நிலையே தொடர்கிறது. இங்கு பணியாற்றும் 75 சதவீத வெளிமாநில ஊழியர்கள் அச்சத்துடன்  வாழும் நிலையே ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் வேறு மாநில கிளைகளுக்கு பணிமாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இந் நிலையில், ஒட்டு மொத்தமாக சென்னைக்கு அலுவலகங்களை மாற்றலாமா என்ற ஆலோசனையும் பல நிறுவனங்களில் நடந்து வருவதாக தகவல்கள் வெளிவருகிறது.
இந்த தகவல்கள் கிடைத்த பிறகுதான், மாநில அரசு துரித நடவடிக்கை எடுத்து கலவரத்தை அடக்க முயற்சி மேற்கொண்டது, ஒரு வாரமாக கையைக் கட்டி கலவரத்தை வேடிக்கை பார்த்த மாநில அரசு, பெரிய நிறுவனங்களின் இந்த திடீர் முடிவால்,  ஷாக் ஆனது. உடனடியாக அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் பெங்களூருவிலிருந்து முக்கிய நிறுவனங்கள் சென்னைக்கு ஷிப்ட் ஆகும் நிலையே இருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply