பூனை பிரியாணி – சென்னையில் பல்லாவரம் , குரோம்பேட்டை , பூந்தமல்லி மற்றும் கோட்டூர்

தாம்பரம் பக்கத்துலே மப்பேடு -ங்கறற எடத்திலே ஒரு நரிக்குறவர் கும்பல் பூனைகளை மொத்தமா வளர்த்து வாரதாவும் டெய்லி கொத்து கொத்தா எங்கிருந்தோ பூனைகளை பிடிச்சு வாரதாவும் அவைகளை கூண்டுகளில் அடைச்சு வைத்து பூனைப் பண்ணைப்போல் வளர்ப்பதா நெற்குன்றத்தை சேர்ந்த வனவிலங்கு அமைப்பிற்கு( people for animal-PFI) ரகசிய தகவல் கிடைச்சிது. ?

இதையடுத்து வனவிலங்கு அமைப்பினர் போலீசுகிட்டே புகார் அளிச்சு போலீசாருடன் அங்கு போனாய்ங்க. இவங்க வருவதை முன் கூட்டியே அறிந்து கொண்ட குரவர் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிட்டுது. இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த பூனைகளை அந்த அமைப்பினர் மீட்டு நெற்குன்றத்தில் உள்ள அவர்களது அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
அப்பாலே விசாரிச்சா அந்த நபர்கள் சென்னை முழுதும் பல இடங்களில் கூண்டுகளை வைத்து பூனைகளை நூற்றுக் கணக்கில் பிடிச்சாந்து அவைகளை மொத்தமாக அவிச்சு கொன்று , அதன் தோலை உரிச்சு துண்டு துண்டா கறித் துண்டுகள் போல் வெட்டி பாக்கெட்டுகளில் அடைத்து ஹோட்டல்களுக்கு சப்ளை செஞ்சதா தெரிய வருது.

எங்கெங்கே விற்றாங்களாம்?
சென்னையில் பல்லாவரம் , குரோம்பேட்டை , பூந்தமல்லி மற்றும் கோட்டூர் புரத்தில் உள்ள சில ஹோட்டல்களுக்கு பூனைக்கறியை சப்ளை செய்துள்ளனர்.
யார் எதுக்கு வாங்குறாங்க:

சில ஹோட்டல்கள் ஆட்டுக்கறியை 450 ரூபாய் கொடுத்து வாங்குவதை விட ஆட்டுக்கறியை விட மிருதுவான பூனைக் கறியை ரூ.100 க்கு வாங்கி பிரியாணி , குழம்பு வைத்து விற்கறாங்களாம். இது தவிர ரோட்டோர கடைகளிலும் பலர் இந்த கறியை ரூ.110 க்கு வாங்கியுள்ளனர்.

இதுக்கு இன்னா தண்டனை:
பூனை வனவிலங்கு பிரிவின் கீழ் வராததால் நாங்கள் எந்த தண்டனையும் கொடுக்க முடியாது என வனவிலங்கு அதிகாரிகள், தெரிவித்தனர். ஆனால் பூனையை நரிக்குறவர்கள் சாப்பிடுவார்கள் அதை யாரும் தடுக்க முடியாது , ஆனால் இது போல் பண்ணை போல் வளர்த்து வெட்டி விற்பனை செய்வது மிகப்பெரும் குற்றம் . ஹோட்டல் மற்றும் சாலையோர கடைகள் சில இதை வாங்கி பயன் படுத்துவதும் குற்றம் இதற்கு தண்டனை உண்டு அதை காவல்துறையும், உணவுப்பதுகாப்புத்துறையும் தான் எடுக்க வேண்டும் என வன அதிகாரி சொல்றாய்ங்க
அத்தோட அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டதால் விரைவில் அவர்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளோம் . அவர்களை பிடிச்சால் அவங்க எந்தெந்த ஹோட்டல்களுக்கு , சாலையோர கடைகளுக்கு கறியை சப்ளை செய்தார்கள் என கேட்டு அவர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல் நடவடிக்கை வரும் என்று (PFI)நெற்குன்றம் வன ஆர்வலர்கள் தெரிவிச்சாங்க

அது சரி.. இதனாலே என்ன பாதிப்பு:
டாக்டர் ஒருத்தரை கேட்ட போ. அட.. பூனைக்கறியும் மற்ற மாமிசம் மாதிரிதான் . என்ன நாம் அதை சாப்பிட்டு பழகலை. அதனால் சிலருக்கு ஒவ்வாமை வரலாம். அம்புட்டுதான். ஆனா வியாபாரி ஒருவர் நுகர்வோரை ஏமாற்றுவது தண்டனைக்குறிய குற்றமாச்சே -ன்னார்.

ஹூ.. என்ன செய்ய? பசி வந்து சாப்பிடும் போது அது பூனை பிரியாணியா , மட்டன் பிரியாணியா-ன்னு என பிரிச்சி பாக்க ஓவொருத்தரும் ஆய்வுக்கூடமா வைச்சிருக்காங்க??

Leave a Reply