பாமாயில்

​பக்கத்தில ஒரு சிப்ஸ் தயாரிக்கற கடை இருக்கு. அங்க 11 மணிக்கு பாமாயிலை பெரிய கடாய்ல ஊற்றி முதல்ல ஆனியன் பக்கோடா, 

பின்னர் அதே எண்ணையில் 3 மணிக்கு சமோசா, அதற்கு அடுத்ததாக உருளை கிழங்கு சிப்ஸ்ன்னு போட்டு முடிக்கிறாங்க.. 

எண்ணைய் குறைய குறைய இருக்கிற எண்ணைய்லேயே இன்னும் கொஞ்சம் புது எண்ணையை சேத்துக்கறாங்க. அது இன்னும் கெடுதல்

 திரும்ப திரும்ப சுட்ட்ட்ட்ட்ட எண்ணையை மறுபடியும் சமையலுக்கு பயன்படுத்தினா கெட்ட கொலஸ்ட்ரால் ,ஃபுட் பாய்ஸன் இத்யாதி இத்யாதி

உடல் ஆரோக்கியகெடுகள்.
 

ஆனா  

 இதோட இந்த எண்ணெய விட்டுட்டா பரவாயில்லே. அடுத்த நாள் இதை வாங்கிட்டுப்போறதுக்கு ரோடோரங்கள்ல ஃபாஸ்ட் ஃபுட் கடை வச்சிருக்கறவன் கேனோட வந்து நிக்கிறான்.

 இந்த சிப்ஸ் கடைக்காரன், தான் வாங்கி, யூஸ் பண்ணிய, சுட்ட்ட்ட்ட்ட  பாமாயிலை பாதிவிலைக்கு அவன்கிட்ட தள்ளிவிடறான்.. 

அவன் அதை கொண்டுபோய் மறுபடியும் அதனோட கொஞ்சம் புது எண்ணையை சேர்த்து சிக்கன்லேந்து, மீன்லேந்து எல்லாத்தையும் பொரிக்க ஆரம்பிக்கறான்.

அவன் போடற பிரைடு ரைஸ், நூடுல்ஸ்ல இருந்து, பாஸ்ட் ஃபுட் மொத்தத்துக்கும் அந்த எண்ணைய்தான் பயன்படுத்தறான்..  

“மாசாலா தூக்கலாப்போட்டு எண்ணைய் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஊத்தி ஒரு எக் நூடுல்ஸ் போடுப்பா”ன்னு ஆர்டர் பண்றவங்களுக்கு இதெல்லாமா தெரியப்போவுது…….

தமிழ்நாட்டின் பெரும்பாலான கடைகளின் நிலை இதுதான்……
அடுத்து

கோழியின் தோல் மற்றும் wastage தான் ,அசைவ குழம்பே….
முட்டைகள் மொத்தமா விக்கிற கடைகள்ல,சில முட்டைகள் ஒடஞ்சிடும்.

அதை தனியா எடுத்து வைச்சிருப்பாங்க. அத பாதி விலைக்கு ஃபாஸ்ட்ஃபுட் கடைக்காரன் வாங்கிட்டு போய் முட்டை #ஆம்லெட் போட்டுக்கொடுக்கிறாங்க.

 டாஸ்மாக் பக்கத்துல வச்சுகிட்டு இருக்கின்ற கடைகள்லயும் பார்லேயும் கட்டாயம் இது தான்.

பெரிய ஹோட்டல்களில் சூப் தயாரிப்பது எப்படி தெரியுமா? 

மார்கெட்ல போனது வந்தது காய்கள் பாதி விலையில் வாங்கியும்,

பொறியலுக்கு உபயோகப்படுத்தும் காய்கறி வேஸ்டும் தான்

#காய்கறி_சூப்.

மீந்துபோன சாதத்தை அடுத்த நாள் சாதத்துடன் சேர்த்துடுவாங்க.

இல்லைன்னா #பொங்கல்_பிஸிபேளா_பாத் எனும் சாம்பார் சாதம் தான் போங்க.

சிலர் மீதி சாதத்தை இட்லி , தோசைக்கு மாவு அரைக்கும் போது சேர்த்துவிடுவர்.

 நாம சப்பிட்றதுமில்லாமல்  , வீட்ல இருக்கிற குழந்தைகளுக்கும் இதை பார்சல் வாங்கிட்டு போய் கொடுத்து அவங்க உடல்ஆரோக்கியத்தையும் கெடுக்கிறவங்களை நினைச்சு வருத்தப்படறதா இல்லே பரிதாபப்படறதான்னு தெரியல..

நம்ம நாட்ல உணவு விஷயத்தில் விழிப்புணர்வு என்பது மக்களுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது.. அரசாங்கமும் இவற்றை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை..

அரசாங்கம் இவங்கள கவனிக்காம இருக்க, இவங்க அதிகாரிகள கவனிக்கறாங்க……. அது போதாதா? 

இது போன்ற கடைகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாதுன்னா, ஏழைங்க பிழைப்புல மண்ணள்ளி போடறோம்னு இங்கயே சிலர் பொங்குவாங்க.

இனிமே வெளில சாப்பிடும் போது இதை எல்லாம் நெனச்சிக்கோங்க….. 

*Home food is always Best*.

FB

Leave a Reply