நாளை கர்நாடக பந்த்

Cauvery row: Karnataka bandh on September 9
*நாளை கர்நாடக பந்த்.. விரிவான போலீஸ் பாதுகாப்புக்கு போலீஸ் ஏற்பாடு
*யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – கர்நாடக போலீஸ் அறிவுரை 
*கர்நாடக பந்த் காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும்
*பெங்களூரு, மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் ஸ்தம்பிக்கும் என்று தகவல்
*தமிழ் டிவி சானல்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டன.. தமிழ்ப் படங்களும் திரையிடப்படவில்லை
*தமிழகத்திலிருந்து செல்லும் அரசுப் பேருந்துகள், தமிழகப் பதிவெண் வாகனங்கள் ஓசூருடன் நிறுத்தம்
*நாளை தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
*தியேட்டர்கள் இயங்காது என்று திரைப்பட வர்த்தக சபை அறிவிப்பு
**பெங்களூரு – மைசூரு சாலையை மக்கள் தவிர்க்குமாறு போலீஸ் எச்சரபிக்கை
*டாக்சிகள், ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிப்பு
*அரசு மறைமுக ஆதரவு தெரிவிப்பதால் அரசு பஸ்கள் ஓடுமா என்பது சந்தேகம்
*அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் இயங்குமா என்பதிலும் சந்தேகம்
*பந்த் போராட்டங்களை அரசு ஆதரிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவால் கர்நாடக அரசு தயக்கம்
*வட கர்நாடகத்தில் பந்த்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை
*பெங்களூரு, மைசூரு, மாண்டியாவில் பதட்டமான பகுதிகளில் போலீஸ் குவிப்பு
*பெங்களூரு விதான சவுதாவைச் சுற்றிலும் அதிரடிப்படையினர் நிறுத்தம்  /tamil.oneindia.com/

Leave a Reply