நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்

சசிகலா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்றுவோம்- அதிமுக பொதுக்குழுவில் உறுதி

சசிகலா தலைமையின் கீழ் பணியாற்ற உறுதியேற்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
சென்னை : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது.

அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து காலியாக உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை தேர்ந்தெடுக்க கட்சியின் முன்னணி தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அதிமுக. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. முதலில் ஜெயலலிதா மறைவுக்கு எழுந்து நின்று இரங்கல் தெரிவித்தனர். அவர் பயன்படுத்திய நாற்காலியில் ஜெயலலிதாவின் படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

செயற்குழு கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை கண்ணீர் மல்க வாசித்தார் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம். அப்போது அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களும் கண்ணீர் சிந்தினர்.

பொதுக்குழுவில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதாவிற்குப் பின்னர் மதிப்பிற்குரிய சின்னம்மா வி.கே. சசிகலாவிடம் அதிமுக தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவின் தலைமையின் கீழ் விசுவாசமாக பணியாற்றுவோம் என்றும் உறுதி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
(மக்கள் குரல் நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என கூறிய அண்ணாவின் வாய்மொழி பழிக்கபோவதாக வேதனை)

Leave a Reply

Your email address will not be published.