நம்ம ஊர்ல எப்ப நடக்கும் இந்த மாறி

 

மக்களை வரிசையில் காக்க வைத்துக் கொண்டு கணிணியில் படம் பார்த்த மருத்துவமனை ஊழியர் ‘முதல்வன்’ திரைப்படப்பாணியில் அதிரடியாக நடவடிக்கை எடுத்த துணை முதல்வர்!
நம்ம ஊர்ல எப்ப நடக்கும் இந்த மாறி.
(நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள சற்று முன் பக்கத்தை LIKE செய்து இணைந்திருங்கள்)…
டெல்லியில் அரசு மருத்துவமனைக்கு திடீரென ஆய்விற்கு வந்த டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிஷோடியா அங்கு ஊழியர் ஒருவர் வேலை பார்க்காமல் கணினியில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருப்பதை கண்டு அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு இன்று திடீரென வந்த ஆம் ஆத்மி கட்சியின் துணை முதல்வர் மனிஷ் சிஷோடியா அங்கு நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்துக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதனை தொடர்ந்து அங்கு வேலை செய்யும் ஊழியர்களை பார்க்க செல்லும் போது, ஒரு ஊழியர் அங்கிருந்த கணினியில் திரைப்படம் ஒன்று பார்த்துக்கொண்டிருந்தார். அமைதியாக சென்ற துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, அந்த ஊழியரின் பின்னால் சென்று அமைதியாக நின்று அவர் செய்வதை கவனித்துக்கொண்டிருந்தார்.
துணை முதல்வரின் வருகையை அறியாத ஊழியர் தொடர்ந்து திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தார்.
எனவே அவரை மனிஷ் சிசோடியா அவரது முதுகில் தட்டி அழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் அந்த ஊழியரின் உயர் அதிகாரியை அழைத்து அந்த ஊழியரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தால் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

Leave a Reply