திண்ணை

​திண்ணை…
ஒரு காலத்தில் தெரு வழியே வருகிற அந்நிய மனிதர்கள் உட்கார்ந்து செல்வதற்காகவே கட்டப்பட்ட திண்ணைகள் இன்று காணாமல் போய்விட்டன.
நான்,எனது என்ற எல்லையில் எல்லாமே சுருங்கிப் போய்விட்டன.
திண்ணைகள் இடித்து வீட்டிற்குள்ளேயே வரவேற்பறைகள் வந்து விட்டன.
வரவேற்பறைகளில் மயக்கும் வண்ணங்கள்,கால் பதிக்க பட்டு விரிப்புகள்,அமர அழகான இருக்கைகள்,கண் சிமுட்டும் அழகான தொலைகாட்சிப் பெட்டிகள், மின்விளக்குகள்,கலைமணம் கமழும் வாசனை திரவியங்கள், செயற்கைப் பூக்கள்,மனித பொம்மைகள் எல்லாமே இருக்கின்றன.’மனிதம்’இருக்கின்றதா?என்பதே கேள்வி.
இந்த வரவேற்பறைகளில் ஒரு வழிப்போக்கன் வழிநடைக் களைப்பிற்கு ஆதரவாய் அமர முடியுமா?
ஒரு தொலைதூரப் பயணி ஒரு சொம்பு நீரோ மோரோ  இருந்து பருகத்தான் முடியுமா?
வாழ்க்கையில் பழுத்ததோர் தாத்தாவோ பாட்டியா ஒரு முகம் தெரியா மனிதரையோ உட்கார வைத்து ஊர் உலகத்து கதையை பேசதான் முடியுமா?
நம் உள்வெளி நாகரிகத்தில் வாழ்க்கை அலங்காரமாகி விட்டது.மனிதம் தான் மூளியாகி விட்டது!

Leave a Reply