தலித் கேடய அரசியலும்.. பெண் கேடய அரசியலும்

தலித் கேடய அரசியலும்.. பெண் கேடய அரசியலும்..!

—————————————————————————————–
“தலித் என்பதால் எனக்கு எதிராக சதி” என்று ஆபாச வீடியோ காட்சியில் சிக்கிய ஆம் ஆத்மீ முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு பெயர்தான் தலித் கேடய அரசியல்.. மற்றும் அயோக்கியத்தனமான அரசியல்.
பிற அரசியல்வாதிகளுக்கும்.. தலித் அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால், மற்றவர்கள்  தவறு செய்து  ஏதாவது பிரச்னையில் சிக்கிக்கொண்டால் முழித்துக் கொண்டிருப்பார்கள். 
ஆனால் தலித் அடையாள அரசியல் செய்பவர்களுக்கு.. இருக்கவே இருக்கிறது.. “ நான் தலித்.. அதனால் சதி செய்கிறார்கள்..” என்ற ரெடிமேட் வசனத்தை எடுத்துவிட்டு பிரச்னையை திசை திருப்பி விட்டுவிடலாம்.. 
அரசியல்வாதிகள் மட்டுமல்ல.. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்.. என தலித் அடையாள லாப அரசியல் செய்பவர்கள் அத்தனை  பேரும் இந்த தலித் கேடய செய்வார்கள். 
’’எனக்கு செக்ஸ் பிடிச்சுருக்கு.. விருப்பப்பட்ட பெண்களுடன் உறவு கொண்டேன்.. அதில் உங்களுக்கு என்ன பிரச்னை” என்று சந்தீப் கூறியிருந்தால் அது நேர்மையாக பிரச்னையை எதிர்கொள்ளும் செயல். ஆனால் சம்பந்தமில்லாமல் தான் தலித் என்று தலித் கேடய அரசியல் தந்திரத்தை பயன்படுத்துகிறார். 
ஆண்கள் இப்படி என்றால் பெண்களின் பாலியல் புகார் அரசியல் அணுகுண்டு ரகம். அதிலிருந்து எவரும் தப்பவே முடியாது. 
பாலியல் சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் பெண்களும் பெண் என்னும் கேடய அரசியலை செய்வார்கள். சந்தீப் குமாருடன் இருந்த பெண்களில் ஒருவர் மயக்க மருந்து கொடுத்து  அவர் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறியிருக்கிறார். 
ஆனால் புகைப்படத்தை பாருங்கள்.. இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்துக் கொண்டிருக்கிறார். இறுக்கி அணைச்சு முத்தம் கொடுக்க வைக்கும் மயக்க மருந்துகள் ஏதும் இருக்கிறதா.. எனக்கு தெரியவில்லை.. 
இதெல்லாம் தினத்தந்தி வகையாறா திரைக்கதை வசனங்கள். காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் திரைக்கதையை அப்படியே நேரில் பார்த்ததுபோல் எழுதுவது.
பெரும்பாலான பெண்களின் பாலியல் புகார்கள் `ஒத்து வரலயா.. இரு உன்னை எப்படி அசிங்கப்படுத்துறேன் பார்..’ என்ற ஈகோவால் கொடுக்கப்படுபவைதான்.  
கடந்த மூன்றாண்டுகளாக திருமணம் செய்வதாக அசை வார்த்தைக்கூறி மாறி மாறி கற்பழித்தார் என்று  செய்தியாக மாறும்.
அதெப்படி மூன்றாண்டுகளாக மாறி மாறி கற்பழிக்க முடியும் என்றெல்லாம் நீங்கள் கேட்க கூடாது.. 
இதெல்லாம் தெரிஞ்சாலும் துபாய் ஈரோடு பக்கமோ தூத்துக்குடி பக்கமோ இருக்குனு போய்ட்டே இருக்கணும்.. அதுதான் மன்னார் அண்ட் கம்பெனிக்கு நல்லது..
நமக்கு எதுக்கு வம்பு.. 😉
-கார்ட்டூனிஸ்ட் பாலா

6-9-16

Leave a Reply