தக தக தங்க கார்கள்..! ஆடி கார்கள் 10, துபாய் அழகிகள்..! எலிசபெத் கப்பல் உல்லாசம்..ஐயோ.. ஐயோ..!

வாட்ஸ் ஆப் பில் உலாவரும் அதிகாரி மகனின் ஆடம்பரக் கார்களைப் பார்த்தால் குபீர் என்று வியர்க்கிறது. விதவிதமான ஆடி கார்கள் மட்டும் பத்து.

தவிர துபாய் பண்ணை வீட்டில் இருக்கும் தக தக தங்க கார் ஒன்றும்  இருக்கிறது. முழுக்க முழுக்க தங்கத்தால் காரின் மேற்பாகம் தயாரிக்கப் பட்டுள்ளது.

இதில் தான் துபாயில் முக்கிய மீட்டிங் சமயத்தில் மகன் போய் இறங்குவாராம்.

இன்னும் ஒரு விஷயமும் சொல்கிறார்கள். காரியம் சாதிக்க விரும்பும் நபர்களுக்கு துபாய்க்கு அழைப்பு வரும்.

குறிப்பிட்ட மிக உயர்ந்த ஹோட்டல் அது. அங்கு நூறாவது மாடிக்கு மேல் அதிகாரி மகனுக்கு ஒரு அறை உண்டு. அலுவலகமும்  அங்குதான். தனி V.I.P லிப்டில் இவர் மேலே போய் விடுவாராம் மற்றவர்களுக்கு சாதாரண லிப்ட்.

இப்படி பந்தா வாழக்கை. தவிர உலகிலேலேயே அதி நவீன சொகுசு கப்பல் எலிசபெத் . உலகம் பூராவும் சுற்றும்  கப்பல் அது.

பல கோடிகள் கொடுத்து புக்கிங்  பண்ண வேண்டும். மகன் வருடம் இரண்டு முறை அதில் உல்லாசப் பயணம் போய்விடுவாராம்  பிடித்த அழகிகளுடன்.

இப்படி  செய்திகள் ஒவ்வொன்றாக கிளம்பி அடி வயிற்றை கலக்குகிறது..! பணம் குவிந்தால் என்ன செய்வதென்றே தெரியாமல் போய்விடுமோ..?!

யார் வீட்டு  பணம் நண்பர்களே..!?

By LIVEDAY

Leave a Reply