டொரண்ட் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்த்தாலே 3 ஆண்டு சிறை

டெல்லி: டொரண்ட் போன்ற தடை செய்யப் பட்ட இணையதளங்களைப் பார்த்தாலோ, பைல்களை பதிவிறக்கம் செய்தாலோ 3 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆபாச வலைத்தளங்களை தடை செய்ததை தொடர்ந்து இந்திய அரசு தற்போது டொரண்ட் வலைத்தளங்கள் மீது குறி வைத்துள்ளது. டொரண்ட் உள்ளிட்ட சட்ட விரோதமாக தகவல்களை பகிர்ந்துகொள்ளும் இணையதளங்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.

டொரண்ட் இணையதளங்கள் மூலம் பல்வேறு தரவுகள் மற்றும் தகவல்களை திருட்டுதனமாக பதிவிக்கம் செய்ய முடியும். இதனால் படைப்பாளிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இந்த செயலானது இந்திய காப்புரிமைச் சட்டத்திற்கு ஏதிரானது. எனவே இந்திய அரசால் தடை செய்யப்பட்ட டொரண்ட் உள்ளிட்ட இணையதளங்களை பார்த்தாலோ அல்லது அதன் கோப்புகளாய் பதிவிறக்கம் செய்தாலோ மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், மூன்று லட்சம் அபதாரமும் விதிக்கப்படும். படைப்பாளிகளைப் பாதிக்கும் டொரண்ட் போன்ற தடை செய்யப்பட்ட இணையதளங்களைப் பார்ப்பவருக்கு 1957ம் ஆண்டில் இயற்றப் பட்ட இந்திய காப்புரிமை சட்டத் தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்கலாம் என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்குள் செல்வதற்கு முன்னர் அது குறித்து எச்சரிக்கையும் வழங்கப்படும். அதை மீறி உள்ளே சென்று தகவல் களைப் பகிர்ந்து கொள்வது, பதிவிறக்கம் செய்வது, பார்ப்பது, இணையத்தில் பதிவிடுவது இந்திய காப்புரிமை சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும் என்றும் தொலைதொடர்பு துறை தெரிவித்துள்ளது. டொரண்ட் உள்ளிட்ட சட்ட விரோதமான வலைத்தளத்தை பார்வையிட்டாலோ அதன் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்தாலோ அது ஒரு குற்றச்செயலாக கருதப்படும். மேலும், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், மூன்று லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு படி, இந்த தடைசெய்யப்பட்ட இணையதளங்களை பயன்படுத்துவோர் மீது காப்புரிமைச் சட்டப் பிரிவு 63, 63-A, 65 மற்றும் 65-அ வின் படி தக்க தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட அனைத்து சினிமாக்களையும் தியேட்டரில் வெளியிடும் முன்பே இம்மாதிரித் தளங்கள் வெளியிடுவதால் சினிமாத்துறைக்கு நஷ்டம் ஏற்படுகிறது என திரைத்துறையினர் பல காலமாகக் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த தடை மூலம் தமிழ் சினிமா உலகம் தப்பிக்குமா பார்க்கலாம்.

 

 

MANI N

பனகாரனுகும், அரசுக்கும், அதிகாரிக்கும் பாதிபுப்னா உடனே சட்டம் போடுறாங்க ……ஆனால் எழ்மையில் உள்ளவரை எழமையாகவே வைத்துக்கொண்டு இருகிற சட்டமும் , அரசும் தேவையா ?

டொரண்ட் – இணையதளங்கள் பார்த்த தப்பு ? அனால் இணையதளங்கள் பிளாக் பண்ணமுடியாது அரசால் !

பீர் , பிராண்டி குடித்து ஒரு ஏழை குடும்பம் அழிதல் தப்பு இல்ல?
பீர் , பிராண்டி விற்றால் ரைட் !

விவசாயி கரும்பு, நெல், விலை நிர்ணயம் செய்யும் அரசு, கொள்ளை அடிக்கும் – தனியார் கரும்பு ஆலை முதலாளிகளும், வியாபாரிகளுக்கு சட்டம் இல்லை !

THOOYAVAN

அடப்பாவிகளா ! கோடி கணக்குல வாங்குற சம்பளத்தை லட்ச்சத்தில மாத்தினாலே பெரு நஷ்டத்தை ஈஸியா தடுத்துடலாம். இப்படியெல்லாம் சட்டம் போட்டுட்டா மட்டும் மக்கள் தியேட்டருக்கு வந்துருவாங்கலாக்கும். மக்களே .. சினிமா பாக்கற காசை தயவு செய்து வேற எதாவது நல்ல விசயத்துக்கு செலவு செய்யுங்க..

PANNEER

என்னுடைய கணினியில், என்னுடைய இன்டர்நெட் பயன்படுத்தி என்னுடைய வீட்டில் எனக்கு பிடித்ததை நான் பார்ப்பதை எப்படி நீங்கள் குற்றம் என்று சொல்லலாம்?

கபாலிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு மட்டும் மக்களே விரும்பி டிக்கெட் வாங்குவதால் குற்றம் இல்லை என்று சொன்ன நீங்கள் இதற்கு மட்டும் ஏன் தண்டனை.

ARULSINGH PARGUNAN

why can’t service providers block such website. Its funny to jail a person you have seen a “A” poster. First ask them to stop. We will not be able to view so we will stop.

Leave a Reply