ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகத்துறை

சுதந்திர இந்தியாவின் மக்களாட்சி நடைமுறையில் நான்காவது தூண் என்று கூறப்படும் ஊடகத்துறை எவ்வாறு இயங்குகிறது என்பதற்கு கீழே உள்ள புகைப்படம் நல்ல சான்று.கேவலம் ஒரு நடிகனுக்கு கொடுக்கும் மதிப்பு 29 ராணுவ வீரர்களின் உயிருக்கு இல்லை.இந்த நாட்டின் ராணுவ வீரர்களை ஊடகங்கள் வெறும் பலிகடாவாக தானே பார்கிறது.இந்திய அரசே கூலிப்படையாக தானே ராணுவ வீரர்களை பயன்படுத்துகிறது.ஏன்னா இது நமக்கான அரசு இல்லை.
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் இந்திய ஊடகங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்களாயின.மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது போன்ற அறம் சார்ந்த கோட்பாடுகள் மறைந்து வணிக நிறுவனங்களுக்கே உரிய லாபநோக்குடன் அவை செயல்படத் தொடங்கின.
இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் உலகளாவிய கண்களுக்கு தெரியாத சிலந்தி வலைகளால் பிணைக்கப்பட்டு மாட்டிக் கொண்டுள்ளன. அவை அரசியல் வலையாகவோ, வணிக வலையாகவோ அல்லது தேசத்திற்கு அப்பார்ப்பட்ட உலகளாவிய நுண்ணரசியல் வலையாகவோ இருக்கலாம்.
மக்களின் நம்பிக்கைகளையும், கருத்துகளையும் உளவியல் ரீதியாக தீர்மானிக்கும் சக்தியாக ஊடகங்கள் உள்ளது. நாம்தான் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஏன்னா ஊடகங்களுக்கு அறம் என்றால் என்னவென்று தெரியாது.இந்த தலைமுறை குழந்தைகளும் அறம் என்றால் என்னவென்று தெரியாமலே வளர்கின்றனர்.

இந்தியா இன்னும் சுதந்திரம் அடையவில்லை என்பதை மனதார ஏற்றுக் கொண்டவர்களால் மட்டுமே மேலே உள்ளவற்றை புரிந்துகொள்ள முடியும்……..

Leave a Reply