சினை பிடிக்க மாட்டிற்கு மட்டும் இல்லை ஊசி… இனி மனிதனுக்கும் தான்:

மாடுகளில் பால் சுரப்பை அதிகரிக்க தற்போது ஆக்ஸிடோசின் என்ற ஊசி போடப்படுகிறது. இதனால் பால் சுரப்பு அதிகமாகும் என்றாலும் ஏற்படும் பின்விளைவுகளோ விபரீதமானது.

முன்பெல்லாம் நாட்டு மாடுகள் இயற்கையான முறையில் சினை பிடிக்கும். முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தே அதன் வளர்ச்சி மாற்றம் இருந்து வரும்.

இப்போது வெளிநாட்டு கலப்பின மாடுகள் வந்ததில் இருந்து மாட்டையும் வாங்கி சினை பிடிக்க ஊசியும் அவனிடமிருந்தே வாங்குகிறோம்.

உணவு உற்பத்தி என்ற நிலை எல்லாம் மாறி போய் லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாறி விட்டது.

பிஞ்சு குழந்தையில் இருந்து, படுக்கையில் கிடக்கும் முதியோர் வரை பால் என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.

அதில் கை வைக்க இந்த வியாபர தந்திரம் கொண்ட நரிகளுக்கு எப்படி மனம் வருகிறதோ தெரியவில்லை.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மாடுகளுக்கு இந்த ஊசிகள் போடப்படுகிறது. இதனால் மருந்தின் வீரியம்  மாட்டுப் பாலிலும் கலந்திருக்கும்.

இதனை குடிப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய், ப்ரோஸ்டேட் புற்றுநோய், ஆண்மையிழப்பு போன்றவை ஏற்படும். அதோடு பல மோசமான உடல் நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

இந்த பாதிப்புகளால் நாமும் ஊசியை தேடி செல்லவேண்டிய நிலை ஏற்படும். ஆரம்பத்தில் வேடிக்கை பார்த்து விட்டு, அபகரித்த பின் கதறுவதை விட வரும் முன்னரே எதிர்த்தால் வருங்கால சந்ததிகள் நிலைக்கும்.

Leave a Reply