காவிரி நதி நீர்

காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக பேசிய தமிழ் இளைஞர் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல். இன்று முழுவதும் சன் டிவியில் இது தான் செய்தி. இதை பலரும் பகிர ஆரம்பிக்க அதில் வந்த பதில்கள் அநாகரீகத்தின் உச்சகட்டம். இந்த செய்தியை தொடர்ந்து சொல்லி சொல்லி சன் டிவி சாதித்தது என்ன? இரண்டு மாநில மக்களிடையே முகநூலில் அநாகரீகமான சண்டை மட்டுமே. ஆனால் மறு பக்கம் உதயா டிவியில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதால் தமிழகத்தில் கர்நாடக மக்கள் அச்சம் என்று செய்தி. மக்களின் உணர்வுகளை தூண்டி அதை செய்தியாக்கி காசு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த விதமான பின்விளைவுகளையும் பற்றி சிந்திக்காமல் இது போன்ற தரம் கெட்ட வேலைகளை செய்வதில் சன் டிவிக்கு நிகர் #சன்டிவி மட்டுமே.
இந்த செய்திக்கு ஆதாரமாக என்ன கிடைக்கிறது என்று தேடிப்பார்த்தால் ஒரு சில ஆங்கில பத்திரிக்கைகளில் மட்டுமே சிறிதளவு விவரம் கிடைத்தது. http://www.thenewsminute.com/article/video-bengaluru-student-thrashed-facebook-post-kannada-actors-49694 அந்த வாலிபர் கர்நாடகாவில் பிறந்து அங்கேயே படித்து வளரும் நபர். அங்கு தான் அவருக்கு வாக்குரிமையும் உள்ளது. அவர் காவிரி விஷயத்தை பற்றி எந்த செய்தியும் எழுதவில்லை.  போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய அவருக்கு பிடிக்காத கன்னட நடிகர்களை கிண்டல் செய்த பதிவுகளை பகிர்ந்து அதில் ஏதோ எழுதி உள்ளார் (என்ன எழுதினார் என்பது பற்றி விவரம் தெரியவில்லை). இதை பிடிக்காத அந்த நடிகரின் ரசிகர்கள் அவரை தாக்கியுள்ளனர். சன் டிவியின் புண்ணியத்தில் அந்த சந்தோஷ் என்ற வாலிபர் ஒரு பெரிய காவிரி நதி நீர் போராட்ட போராளியாக உருவாக்கப்பட்டு விட்டார். விரைவில் #IsupportSanthosh என்று ஒரு முட்டாள் கும்பல் கிளம்பிவிடும். 
தமிழர்களை எவ்வளவு எளிதில் முட்டாள்கள் ஆக்கலாம் என்பதற்கு மற்றுமொரு உதாரணம்.

Leave a Reply