”என்னை சிக்க வைத்தால்.. கூண்டோடு உள்ளே போவீர்கள்” சசிகலாவை எச்சரித்த ராவ்?

ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு என்றதுமே முதலில் ஆடிப் போனது ராவ் அல்ல சசி தரப்பு தான் நடுங்கிப் போனது. தம்பிதுரை டெல்லியில் இது பற்றி பதறிப் போய் விசாரித்துள்ளார். ஆனால், நக்கல் சிரிப்புதான் டெல்லியின் பதில்? எந்த உருப்படியான பதிலோ, உதவியோ கிடைக்கவில்லை.

ஒரு வித கலக்கத்தில் தான் ஒவ்வொரு நாளும் கழிந்தது என்கிறார்கள். அதே போல நெஞ்சுவலி நாடகத்தை நடத்தி ராமச்சந்திரா மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார் ராவ். ராவோட ராவாக என்ன செய்யலாம் என படுத்துக்கொண்டே ஊழல் விஞ்ஞானி ராவ்? எப்படி வெளிவருவது என்கிற விவாதம் அங்கு நடந்ததாம். அரசு தரப்பில் எந்தப் பதிலும் வரவில்லை. முதல்வர் பன்னீர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார் ராவ். அவர் டெல்லி போகும் போகும் போதே என்னவோ நடக்கப் போகிறது என்பதை எதிர் பார்த்துள்ளார்.

அவசரமாக சில விஷயங்களை இடம் மாற்றி இருக்கிறார்கள். ஆனால், அடுத்த நாளே ரெய்டு வரும் என்று சத்தியமாக ராவ் எதிர் பார்க்கவே இல்லை. மருத்துவமனையில் இருந்த போது சசி தரப்பு பேசுவார்கள் என்றும் எதிர் பார்த்தாராம் ராவ். ம்கூம் சசிதரப்பில் மூச் விடவில்லை. பிரஸ் மீட்டுக்கு ஒரு முடிவோடு ஆயத்தமானார் ராவ். யாரையும் விடக் கூடாது என்று கடும் கோபத்துடன் வெளியே வந்தவர் பொங்கி விட்டார்.

வீடு திரும்பியவர் முதலில் சசி தரப்பைத் தான் தொடர்பு கொண்டார் என்கிறார்கள். கூட சேர்ந்து அனுபவித்தவர்கள் வெளியே. நான் மட்டும் உள்ளே போக வேண்டுமா..? யாரும் தப்ப முடியாது என்று கடும் வார்த்தைகளால் வறுத்து எடுத்தாராம் ராவ், அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதே சில செய்தியாளர்கள் ஒரே ராத்திரியில் ராவின் நெஞ்சு வலிய குணமாக்கிய டாக்டர் யாரு?#மெடிக்கல்_மிராக்கிள் என பேசி சிரித்துள்ளனர்.

பேட்டியளிக்கையில், ராவுடைய பேச்சு, சில முக்கியமான கருத்துகளைச் சொல்கிறது. அவர் தன்னைப் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசுடைய கடமை என்பதைச் சொல்லியிருக்கிறார். ராகுலுக்கும், மம்தா பானர்ஜிக்கும் நன்றி சொல்லிவிட்டு, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இன்றைக்கு நான் கைது செய்யப்பட்டிருக்க மாட்டேன் என்பதை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

தமிழக அரசு என்னை பாதுகாக்கவில்லை என குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த இரண்டையும் ‘என்னை, தமிழக அரசு பாதுகாக்கத் தவறிவிட்டால், நான் சொல்லக்கூடிய உண்மைகள் அனைவருக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கும்’ என்ற, ராமமோகன் ராவின் மிரட்டலாகத்தான் புரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. இன்னும் எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், ‘என்னை தமிழக அரசு காப்பாற்றவில்லை என்றால் நான் அப்ரூவராக மாறிவிடுவேன்’ என்ற மிரட்டலாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது.

இவ்வளவு பெரிய சோதனைக்குப்பிறகும், பல முக்கிய ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன என்பது தெரிந்தபிறகும் அவருடைய துணிவு என்பது ‘நான் தனி மனிதன் அல்ல, ஒரு கொள்ளைக் கும்பலின் பகுதிதான், என்னைக் காப்பாற்ற வேண்டிய கடமை அந்த கும்பலின் பிற உறுப்பினர்களுக்கு இருக்கிறது’ என்பதைத்தான் உணர்த்துகிறது.

அதுமட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான மக்கள் பணத்தைக் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இன்றைக்கு குற்றவாளிக் கூண்டிலிருந்து அவர் பேசுகிற வார்த்தைகளில் இருக்கிற துணிவு, ‘நான் ஒரு அரசு அதிகாரி. இந்தியாவின் மிக உயரியநிலையில் இருக்கிற ஐஏஎஸ் அதிகாரி என மார்த்தி சொல்வது கேலி கூத்தாக உள்ளது.

 

seithipunal.com

Leave a Reply