உலக அளவில் இந்தியா முதல் இடம்

உலகளவில் கிராமப்புறங்களில் சுத்தமான குடிநீர் வசதி கிடைக்காதவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

சுத்தமான குடிநீர் கிடைக்காதவர்களில் உலகளவில் 10% பேர் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 6.3 கோடி மக்கள் சுத்தமான நீர் கிடைக்காமல் அசுத்தமான குடிநீரைப் பயன்படுத்துவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 2050 ம் ஆண்டில் உலகளவில் 40% பேர் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. அசுத்தமான குடிநீரைப் பயன்படுத்துவதால் உலகளவில் ஆண்டுக்கு 3,15,000 குழந்தைகள் உயிரிழப்பதாகவும், அதேவேளை ஊட்டச்சத்தின்மை குறைபாட்டால் நோய்களுக்கு ஆட்பட்டு இறக்கும் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

‘வாட்டர் எய்டு’ எனப்படும் சர்வ தேச அமைப்பு இதுதொடர்பான அறிக்கை வெளியிட்டள்ளது. அதன் படி, இந்தியாவில் 7.58 கோடி பேர், அதிக விலை கொடுத்து சுத்தமான குடிநீர் வாங்கும் நிலையில் உள்ள னர். அல்லது கழிவு நீர் அல்லது ரசாயனம் கலந்து விநியோகிக்கப் படும் நீரைப் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் சுமார் 65 கோடி பேர் சுகாதாரமற்ற நீரை பயன்படுத்துகின்றனர். அவர்களில் 10-ல் ஒருவர் இந்தியர்.

கடந்த 1990-க்குப் பிறகு சுகாதார மான நீரைப் பயன்படுத்தும் நிலை யில் சற்று மேம்பாடு காணப்பட் டுள்ளது. 260 கோடி மக்கள் இக் காலகட்டத்துக்குப் பிறகு சுத்தமான நீரைப் பெறுகின்றனர்.

ஏழை இந்திய மக்கள் சுத்தமான நீர் கிடைக்காமல், தினமும் 50 லிட்டர் நீரை, சுமார் ரூ.48 கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ள னர். அவர்களின் தினசரி சம்பாத் தியத்தில் 20 சதவீதம் நீருக்காக செலவிடப்படுகிறது.

திட்டமிடுதலில் தவறு, நீர் விநியோகத் திட்டங்களில் முறை யின்மை ஆகியவை மற்ற முக்கிய காரணிகள். போதுமான ஆதாரங்க ளின்றி திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. குடியிருப்பு பகுதிகளை குழாய்கள் சென்றடைவதில்லை.

மோசமான தண்ணீரைக் குடிப்ப தால் மயக்கம் மற்றும் நோய் பாதிப் புக்கு மக்கள் ஆளாகின்றனர். ஆண்டுதோறும் இந்தியாவில் 3.15 லட்சம் குழந்தைகள் டயோரியா (வயிற்றுப்போக்கு) நோய்க்கு ஆளாகின்றனர். 1.4 லட்சம் குழந்தை கள் இதனால் இறக்கின்றன.

குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி, நதி மாசடைதல் அதிகரித்தல் போன்ற பிரச்சினைகளை இந்தியா எதிர் கொண்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் கிராமத் தினர் அதிகம் மோட்டார்களை பயன் படுத்துவதால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைகிறது. இப்பிரச் சினைகள் உலக வெப்பமயமாதலை மேலும் சிக்கலாக்கி, பருவநிலை மாறுபாட்டை தீவிரப்படுத்து கின்றன. அடுத்த 15 ஆண்டுகளில், இந்தியாவில் நகரங்கள் மற்றும் வேளாண்மைக்கான நீர்த்தேவை யில் 50 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.

உணவுக் களஞ்சியமான பஞ்சாப் நிலத்தடி நீர் மாசுபாட்டைத் தவிர்க்க பொது வடிகால் வசதியை மேம் படுத்துகிறது. இந்தியாவில் பொது சொத்துகள் முறையாக பேணப் படுவதில்லை என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.சுத்த மான குடிநீர் மக்களின் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் ஏற் கெனவே அறிவித்திருப்பது குறிப் பிடத்தக்கது.

Leave a Reply