இன்றைய காலகட்டத்தில் 100 கோடிக்கு மேல் வைத்து எடுக்கும் எவ்வுளவோ திரைப்படங்களை பார்கின்றோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் 

இன்றைய காலகட்டத்தில் 100 கோடிக்கு மேல் வைத்து எடுக்கும் எவ்வுளவோ திரைப்படங்களை பார்கின்றோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு அதனால் என்ன பயன்?????.

சற்று நம் வாழ்வியலை யோசியுங்கள்…
பாலற்றின்  மொத்த நீளம் 347KM கர்நாடகாவில் 93 கிலோ மீட்டர் பாய்கிறது. ஆந்திராவில் 33 கிலோ மீட்டர் மட்டுமே பாய்கிறது ஆனால் அதில் 25க்கும் மேல் தடுப்பணைகள்  உள்ளன கர்நாடகத்திலும் பல தடுப்பணைகளும் ஏரிகளும் இந்த நீரை தேக்கிக் கொள்கின்றன.
இந்த பாலாறு நதி நமது தமிழகத்தில் மட்டும் தான் 222 கிலோ மீட்டர் பாய்கின்றது ஆனால் அதில் ஒரு தடுப்பணை கூட இல்லை . 
மேலும் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீரும்  பாலாற்றில் தான் கலக்கின்றன. 
தமிழகத்தில் பாலாறு செல்லும் இடங்களில் சரியான கரைகளே இல்லை மேலும் தண்ணீர் செல்லக் கூடிய இடங்களில் வெறும் முள் புதர்களும் கருவேல மரங்களே உள்ளன.
சரி எவ்வுளவுதான் செலவு ஆகும் இந்த பாலாற்றை சீரமைக்க?? .
200கி.மீ உள்ள இந்த பாலாற்றை ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு ஜே.சி .பி இயந்திரத்தை கொண்டு கரைகளை அமைக்க மற்றும் முள் புதர்களை சீரமைக்க  நாளொன்றுக்கு சராசரியாக ரூ2500+ வீதம் 5 நாட்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ12,500+/ வீதம் 200 ஆட்களுக்கு ரூ25 லட்சம் ஆகிறது. 
மேலும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 5 உதவி ஆட்கள் நபர் ஒருவருக்கு அதிக பட்சமாக ரூ1000 வீதம் 5 நாட்களுக்கு 5000ரூ .    200×5= 1000 ஆட்களுக்கு 10 லட்சம் ஆகிறது.200கி.மீ யில் தற்சமயத்திற்க்கு ஒவ்வொரு 25கி.மீ க்கும் 40அடி உயர  தடுப்பணை அதாவது 8 தடுப்பணைகள் கட்ட , தடுப்பணை ஒன்றுக்கு சராசரியாக 25லட்சம் வீதம் 8 தடுப்பணைக்கு 2கோடி மட்டுமே . 
மொத்தத்தில் பாலாற்றை சீரமைக்க மற்றும் ஒழுங்கு படுத்த தோராயமாக 2 முதல் 3 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவாகும்.ஆனால் தமிழகத்தில் இவ்வுளவு மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருந்தும் பாலாறு, செய்யாறு போன்ற பழமை வாய்ந்த முக்கிய நதிகள் கேட்பாரற்றும் கழிவு நீர் கலந்தும் மாசுபட்டு கிடக்கின்றன.
மாற்றுவோம் இந்த நிலைமையை !! நமது தமிழ்நாட்டின் நீர் நிலைகளை காப்போம்… 
நம்மால் முடிந்தவரை இந்த தகவலை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்போம் அரசு நடவடிக்கை எடுக்கும் வரையில்!.
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

Leave a Reply