இந்தியா ஏன் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வதில்லை?

இந்தியா ஏன் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வதில்லை?

காரணம் ரொம்ப சிம்பிள்…
Microsoft ம் கம்பெனிதான். 

சரவணா ஸ்ட்ரோஸ்ம் கம்பெனிதான்.

இரண்டுமே லாபம் தரும் நிருவனங்கள் என்பதால், சரவணா ஸ்ட்ரோஸ் முதலாளியை Microsoft CEO ஆக்கிட முடியுமா?

நிஜத்தில் முடியாது.

ஆனால் சுதந்திர இந்தியாவில் முடியும்.
இந்த கூத்துதான் இந்தியன் Sports Authority யில் ஐம்பது வருஷமா நடக்குது.

Money மேனேஜ்மென்ட் தெரியும் என்பதால் கூகிள் சுந்தர் பிச்சை இருக்கும் இடத்தில் மவுண்ட் ரோட் ராப் பிச்சைக்காரனை உட்கார வைக்க முடியுமா?

நிஜத்தில் முடியாது.

ஆனால் இந்தியாவில் முடியும்.
இந்தியாவில் உள்ள எல்லா ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி பாடிகளின் ஹெட்களும் அரசியல்வாதிகள் தான்.

இரும்பு அடிக்கிற இடத்தில் ஈ க்கு என்ன வேலை?
ஹாக்கியில் பர்கத் சிங், தன்ராஜ் பிள்ளை எல்லாம் என்ன ஆனார்கள்?. 
அவர்களின் திறமையை இந்தியா எந்தளவு Retire ஆன இவர்களிடம் இருந்து உபயோகித்து உள்ளது.

இவர்கள் எல்லாம் இன்று Selection கமிட்டியில் கூட இல்லை.
இந்தியன் ஒலிம்பிக் Association தலைவர் பெயர் நாராயணன். இவர் யாருனு அவருக்கே தெரியாது. அதுக்கு முன்னாடி கல்மாடி. 

அதுக்கும் முன்னாடி மொட்டை மாடி…
இந்தியன் பாட்மிண்டன் Association ஹெட் முலாயம் சிங் மகன் அகிலேஷ் யாதவ்.
தமிழ் நாட்டு ஹெட் அன்புமணி ராமதாஸ்.
சீனு மாமா,அருண்ல ஜெட்லீ, லல்லு, பில்லு, கல்லுனு எல்லா இடத்திலும் ரசாயன அரசியல்வாதிகள்தான்.
பல்லாங் குழி விளையாட்டு முதல் படகு போட்டி வரை விளையாட்டுக்கு ஒதுக்கப்படும் கோடிகள் இந்த அரசியல்வாதிகளின் ஹாலிடே ரிசார்ட்க்களுக்குதான் போகிறது.

அபினவ் பிந்த்ராவின் துப்பாக்கி போட்டிக்கு முன் வேலை செய்யவில்லை.
மாரத்தான் ஓட்ட வீராங்கனைக்கு ஷவே இல்லை.

ஸ்விம்மிங் விளையாட்டு வீரனுக்கு கரெக்ட் சைஸ் ஜட்டி கூட இல்லை.
இது எல்லாம் சின்ன சின்ன பிரச்சனை. 
ஒரிஜினல் பிரச்சனை என்னனா, ஒழுங்கா ஆடுறவனே ஒலிம்பிக் குழுவிலேயே இல்லை. 
இதை யாரும் வெளியே சொல்ல மாட்டார்கள். செலக்ட் ஆனவர்களை பார்த்து 50 வருஷமா அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை டொக் டொக்னு கை தட்டிக் கொண்டு இருப்போம்.
ஒலிம்பிக் போறது முன்னாடி எல்லாருக்கும் டெல்லி டெய்லரிடம் ஒரு கோட் சூட் தைத்து இந்தியா கொடியை கையில் கொடுத்து போய் ஜெயிச்சுட்டு வான்னு சொன்னா எப்படி?.
இன்னைக்கு ஒலிம்பிக்கில் ஆட போயியிருக்கும் ஆட்கள் Selection னில் எத்தனை சதவீதம் ஆட்களின் Selection னில் அரசியல் தலையீடு ஏதாவது ஒரு விதத்தில் இருந்து இருக்கும்??.
அதையும் தாண்டி தப்பி வந்தவர்கள் உண்மையான திறமை வாய்ந்தவர்கள். இது ஒண்ணு அல்லது இரண்டு சதவீதம்.
நாம் டிவியில் பார்த்து இந்தியா பதக்கம் பெறாதா என்று கை தட்டும் 98% ஆட்கள் எதோ ஒரு வகையில் அரசியல் செல்வாக்கால் உள்ளே வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். 
அதனால்தான் நாம் எவ்வளவு கை வலிக்க தட்டினாலும் ஜெயிப்பதே இல்லை.
உண்மையான இந்தியன் ஒலிம்பிக் தங்க மெடல் வாங்கும் திறன் உள்ள வீரன் அல்லது வீராங்கணை தங்கள் மாவட்ட அல்லது மாநில அளவிலேயே நசுக்கப்பட்டுட்டுதான் இருப்பார்கள்.
இன்று தங்க மெடல் வாங்கும் திறன் உள்ள இந்தியன் ஒண்ணு டீ ஆத்திட்டு புலம்பிகிட்டு இருப்பான், இல்லை Software Code எழுதிட்டு இருப்பான்.
சிலர் குழந்தை குட்டியோட செட்டில் ஆகி இருப்பார்கள்.

இவர்களை எப்போ தேடி கண்டு பிடிக்கிறமோ அன்னிக்கிதான் பதக்கம் வாங்க முடியும்.
தேர்தலில் தோற்க போகிறோம்னு தெரிஞ்சும் காசுக்கு மாறடிக்கும் கட்சிகள் போலதான் விளையாட்டு இந்திய நிலை.
அது வரைக்கும் 

கலக்க போவது யாரு,

சீசன் 5, 

சூப்பர் சிங்கர், 

வாணி ராணி போதும்.
ஆப்கானிஸ்தான், பர்மா, சூடான் எல்லாம் பதக்கம் வாங்கினாலும் நமக்கு கவலை இல்லை.

இந்தியா வல்லரசா மாறினா மட்டும் போதும்.

போய் புள்ள குட்டிங்களை படிக்க வைப்போம்.
படிக்கிற நேரத்தில் என்ன விளையாட்டு வேண்டி இருக்கு?.
இதெல்லாம் பணத்தை மேய்கிறவனுடைய 

வக்கிர பொழுது போக்கு.
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

Leave a Reply