ஆசைப்பட்டது பிரியாணிக்கு: தீக்கிரையானது 42 பஸ்கள்

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகவில் போராட்டம் வெடித்தது. தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பெங்களூரு பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த கே.பி.என். நிறுவனத்திற்கு சொந்தமான 42 வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில பாக்யஸ்ரீ என்ற 22 வயது இளம்பெண்ணும் ஒருவர்.

சம்பவத்தன்று ரூ.100ம் பிரியாணி பொட்டலம் தருவதாக கூறி தனது மகளை போராட்டக்காரர்கள் அழைத்து சென்றதாக, பாக்யஸ்ரீயின் தாயார் எல்லம்மா போலீசாரிடம் கூறியுள்ளார். பெங்களூரு கலவரம் தொடர்பாக இதுவரை 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பாக்யஸ்ரீ மட்டுமே பெண்.

One India

Leave a Reply