ஆக்ஸிஜனை தரும் அற்புதமான பெயர் பலகை

​படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டிருப்பது ஒரு அற்புதமான பெயர் பலகை, இந்த பலகை மற்றும் இதற்கான இரும்பு பில்லர்கள், 24 மணி நேரமும் ஆக்ஸிஜனை வெளியிடுவதோடு, அம்மை போன்ற கொடிய நோய்களுக்கு அருமருந்தாகவும் பயன் படும். அதாவது அந்த இரும்பு தூண்கள் துரு பிடிக்கும் பொழுது அந்த துருவை அள்ளித்தின்றோமானால் மிகவும் மருத்துவத்தன்மை வாய்ந்தவையாக சித்தர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பெயர் பலகைக்கு அருகில் வெட்டப்பட்டிருக்கும் நான்கைந்து மரங்கள், அதுவும் குறிப்பாக மூன்று வேம்பு மரங்கள் ஐம்பது முதல் எழுபத்தைந்து வருட வயதை தாண்டிய மரங்கள் இத்தனை நாட்கள் இந்த இடத்தில் தண்ட கருமமாக இங்கே வளர்ந்து இருந்தன. 

மேலும் இயற்கைக்கு புறம்பாகவும், சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிப்பதாகவும் இந்த மரங்கள் இங்கே இத்தனை வருடங்கள் வாழ்ந்திருக்கின்றன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. வெய்யில் நாட்களில் மக்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய நிழலையும், பறவைகளுக்கு ஆய் இருக்க கூடிய அசுத்த கழிப்பிடமாகவும் இந்த மரங்கள் இருந்திருக்கின்றன. இப்பொழுது இந்த மரங்கள் மிக அழகாக வெட்டப்பட்டிருப்பது மிகவும் இயற்கை எழில் கொஞ்சிம் கண்கொள்ளக்காட்சியாக உள்ளது.

1947 முதல் இந்திய சுதந்திரம் வாங்கியதிலிருந்து இந்த பெயர் போர்டு இல்லாததால் யாரும் பாண்டி,சென்னைக்கு செல்ல வழி தெரியாமல் காரைக்காலிலேயே முடங்கி கிடந்திருக்கின்றார்கள், மேலும் 500 மற்றும் 1000 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வருபவர்கள் கீழ காசாகுடி வரை வந்து விட்டு, காரைக்காலுக்கு வழி தெரியாமல் இத்தனை ஆண்டுகளாக திரும்பி சென்றிருக்கின்றனர்.

இம்மரங்களை வெட்டி விட்டு இந்த இடத்த்த்த்த்தில் போர்டு வைத்தமைக்கு நன்றி.

 FB Copy

Leave a Reply