பிறந்த நாளில் அழுத கமல்

கமலின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. உடல்நிலைக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் சமூகவலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. இந்தப் பிறந்தநாள் குறித்து கமல் பேட்டியளித்ததாவது: மாடிப்படியில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் ஓய்வில் உள்ளேன். பெரும்பாலான நேரங்களில் உறக்கத்திலும் மயக்கத்திலும் இருக்கிறேன். எனவே பிறந்தநாளைக் கொண்டாட முடியாமல் போய்விட்டது. …

More