விருத்தாச்சலம் பழமலைநாதர் கோயில்

பழமலைநாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ளவிருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். மூலவர் விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர், தாயார் விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி மற்றும் பாலாம்பிகை (எ) இளைய நாயகி ஆவர். சமயக்குரவர்களால் பாடல் பெற்ற இத்தலம் நடுநாட்டுசிவதலங்களில் முக்கியமானதாகும். பிரமனும் அகத்தியரும் வழிபட்ட தலம் எனப்படுகிறது. சுந்தரர் பரவையாருக்காகப் பொன்பெற்று, அப்பொன்னை மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூர் கமலாயத்தில் எடுத்தார் என்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்). கோயில் அமைப்பு இந்த சிவாலயம் நான்கு புறமும் …

More

தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீசுவரர் கோயில்

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் சுந்தரரால் தேவாரம் பாடல்பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர், தாயார் ஒப்பிலாநாயகி. மேலும் இத்தலத்தில் ஜாம்புவதடாகம் என்ற தீர்த்தமும், தலமரமாக கொன்றை மரமும் உள்ளன. முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாலேயே இத்தலத்தின் தீர்த்ததிற்கு ஜாம்புவதடாகம் எனும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகின்றது. தல புராணம் நாள்தோறும் சிவனடியார்களுக்கு உணவிட்டு பின் உணவருந்தும் வழக்கமுடைய தம்பதிகள் தீர்த்தனகிரி தலத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்களை …

More