யார் சசிகலா?

​தமிழக ஆளும் கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளரானார் சசிகலா. யார் சசிகலா? 33 ஆண்டுகள் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி அதுக்கு முன்னாடி? சென்னையில் கேசட்கடை நடத்தி வந்தார் சசிகலா. அதுக்கு முன்னாடி? எமர்ஜென்சியில் வேலை இழந்த மன்னார்குடி நடராசன் என்பவரின் மனைவி. அதுக்கு முன்னாடி? 1973 ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடராசனுக்கும் சசிகலாவிற்கும் திருமணம் நடைபெற்றது. அதுக்கு முன்னாடி? செய்தி தொடர்பு துறையின் இரண்டாம் நிலை அதிகாரியாகவும்,திமுக கட்சிக்காரராகவும் இருந்த நடராசனுக்கு நிச்சயமானார் சசிகலா. அதுக்கு …

More

10ம் தேதிக்குள் தீர்ப்பு.? சிஎம்மாதான் ஜெயிலுக்கு போவேன்.! அடம் பிடிக்கும் சசி.! வேலைகள் ஆரம்பம்.!

தமிழக அரசியலில் நாளுக்கு நாள், தினம் தினம் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வந்து கொண்டே உள்ளது. கடந்த1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரை நடந்த ஆட்சியில் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக கடந்த திமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு கா்நாடக உயா் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. அதில் குற்றவாளியாக தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஜெயலலிதா உள்ளிட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 வருடம் சிறை தண்டனை 100 …

More

200 ரூபாய் பணத்திற்கும் ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும்

200 ரூபாய் பணத்திற்கும் ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும் வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில் புரட்சி எங்ஙனம் வெடிக்கும்? அயோக்கியன் என்று தெரிந்த பின்னும் அவனுக்கு ஆரத்தி எடுத்து ஆரத்தித் தட்டில் விழப்போகும் சில்லரை பணத்திற்காக பல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எங்ஙனம் சாத்தியம்? எத்தனை கொடுமைகள் இழைத்தாலும் அதனையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் மீண்டும் சின்னங்களை மட்டுமே பார்த்து வாக்களிக்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எப்படி நடக்கும்? …

More

சின்னம்மா போட்ட பிச்சையால் தான் ஜெயலலிதா முதல்வரானார்! – சர்ச்சையில் சிக்கிய பா.வளர்மதி!

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரின் புகழ்பாடி வந்த அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் தற்போது ’சின்னம்மா’ சசிகலா புராணம் பாடி வருகின்றனர்.   ஜெயலலிதா இருக்கும் போது சசிகலாவை பற்றி வாயே திறக்காத பலர் இன்று அவர் செய்த தியாகங்கள் என பல விடயங்களை பட்டியலிட்டு வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த அதிமுக பொதுகுழுவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, 1996ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால், …

More

முதல்வர் பதவி அவ்வளவு ஈசியாக போய்விட்டதா.. ஆத்திரத்தில் மக்கள்..

 சென்னை: சசிகலாவை முதல்வராக்கும் அளவுக்கு அந்த பதவி எளிதாக போய்விட்டதா..? என ‘ஒன்இந்தியாதமிழ்’ வாசகர்களில் அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்கியதன் மூலம், அவரை முதல்வர் பதவிக்கு நகர்த்தி செல்ல ஆயத்தங்கள் நடக்கிறது. ஜெயலலிதாவால் அரசியலில் இருந்து தூரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சசிகலா திடீரென முதல்வர் பதவி வரை நகர்வது குறித்து வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஒன்இந்தியாதமிழ் வெப்சைட் சார்பில் கருத்து கணிப்பு நடத்தினோம். சசிகலாவை முதல்வராக ஏற்றுக்கொள்வோம், ஏற்றுக்கொள்ள மாட்டோம், …

More