தோசை சுட்டு உயர்ந்த தமிழன்

சமீபகாலங்களில் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் உழைப்பால் உயர்ந்த சிலரை பற்றி வாசிக்கும்போது தெரிய வருகிற விஷயம் – சரியான முறையில் இந்தியர்களை பசியாற்றினால், கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்பது தான். இதோ அப்படி உயர்ந்த ஒரு சாதனை தமிழனின் கதை. ப்ரேம் கணபதி. — தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் பக்கமிருக்கிறது, நாகலாபுரம் என்ற கிராமம். அந்த ஊரை சேர்ந்த ப்ரேம் கணபதிக்கு பத்தாவது வரை தான் படிப்பு. அதற்கு மேல் படிக்க விருப்பம் இல்லை. சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார். …

More