காணாமல் போன வாழ்த்து அட்டைகள்

நிறைய அட்டைகளை வாங்கி அதில் வாழ்த்தாய் சில கவிதை வரிகளை எழுதி முகவரி சரிபார்த்து அஞ்சல் நிலையம் சென்று ஸ்டாம்ப் வாங்கி அங்கிருக்கும் பசையை எடுத்து  நேர்த்தியாய் ஒட்டி அனுப்பி விட்டு வருவோம். அதில்தான் எத்தனை சந்தோஷம். அண்ணனுக்கு..அக்காவுக்கு..மாமாவுக்கு ..மச்சானுக்கு, தம்பிக்கு உறவினர்களுக்கு நண்பர்களுக்கு,தோழிகளுக்கு,அண்ணன் குழந்தைகளுக்கு, அக்கா குழந்தைகளுக்கு என தரம் பிரித்து அனுப்பி வைப்போம். தபால்காரர் வாழ்த்து அட்டைகளை குடுக்கும்போது, யார் அனுப்பி இருக்கா என்ன படம் அனுப்பியிருக்கார் என பிரித்துபார்த்து அடையும் சந்தோஷமே தனி. …

More

போகிப் பண்டிகையின் போது ஏன் பழையதை எரிக்க வேண்டும்

போகிப் பண்டிகையின் போது ஏன் பழையதை எரிக்க வேண்டும்? பொங்கல் திருநாள் யாருக்காக கொண்டாடப்படுகிறது? போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம். முக்கியமாக விவசாயக் குடும்பங்களில் பெண்கள் அணிந்த பழைய உடைகளை எரித்து விடுவது வழக்கம். அந்தக் காலத்தில் உடைகளின் எண்ணிக்கை …

More

தசராவுக்கு பதில் பொங்கல் விடுமுறை சேர்ப்பு

பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு திடீரென நீக்கி விட்டதாக நேற்று பரபரப்பாக தகவல் வெளியானது. தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ‘விடுமுறை ரத்து’ அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் 4 நாட்கள் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர். பொங்கல் விடுமுறை ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அனைத்துக் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக …

More

கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கல் பண்டிகை சேர்ப்பு! பணிந்தது மத்திய அரசு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அன்று ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை இல்லை என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை அளிக்க அறிவுறுத்தி, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் . இதைத்தொடர்ந்து தற்போது, மத்திய அரசின் கட்டாய அரசு விடுமுறை பட்டியலில், பொங்கல் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தசரா பண்டிகைக்கு பதிலாக, பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. …

More

இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் .. சொல்வது சாமி

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து மாடுகள் விரைவில் நீக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் …

More