வைர வரிகள்

நம்மில் நிறைய பேர் ஒரு புது நட்பை தேர்ந்தெடுப்பது எதை அடிப்படையாக வைத்து என்று பார்த்தோமானால் அது பெரும்பாலும் புகழ்ச்சியை அடிப்படையாக வைத்து தான் இருக்கும். ஆனால் அது சரியான முறையா? “இந்திரனே, சந்திரனே, இவரைப் போல யாரும் இல்லை… உன்னைப் போல அந்த வேலையை செய்து முடிக்க யாருமில்லை!” என்று புகழ்ந்து கூறினால் போதும் சிலருக்கு உச்சி குளிர்ந்துவிடுகிறது. அதற்கு பிறகு அவர்களுக்கு வைக்கப்படும் ஆப்பு கண்களுக்கு தெரிவதில்லை. ஒரு மனிதனுக்குப் பாராட்டு, புகழ்ச்சி, ஊக்கம் …

More

உண்மையான மகிழ்ச்சி!

உலகமே வியந்த, பொறாமைப்பட்ட, உச்சமான நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவ்னத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56 வ்யதில் உலகைப் பிரிவதற்கு முன்பாக விட்டுச் சென்ற செய்தியை அவரின் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப் படுத்திச் சொல்கிறேன்.. “வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு …

More

வெறுப்புணர்வு

ஒரு மன்னன் தனது அமைச்சரை அழைத்துக்கொண்டு மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். ஒரு வீட்டுத் திண்ணையில் அந்த நாட்டு பிரஜை ஒருவன் ஏதோ யோசித்தபடி அமர்ந்திருந்தான். அரசன் அவனை பார்த்துக்கொண்டே சென்றான். மறுநாள் அதே நேரம் அதே இடம். அந்த மனிதன் முதல் நாளைப் போலவே சிந்தனையிலிருப்பதை பார்க்கிறான். “அமைச்சரே, அந்த மனிதனை நேற்றும் பார்த்தேன். இன்றும் பார்க்கிறேன். ஏனோ தெரியவில்லை அவனை பார்த்ததும் அவனுக்கு ஏதேனும் தண்டனை தரவேண்டும் என்று தோன்றுகிறது. அவனை பற்றி எனக்கு ஒன்றும் …

More

போராடாதீர்கள்

அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.   அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார். மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது.  நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் …

More

கடுகளவேனும்

​ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.  அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும். ஒருநாள் திடீரென்று  “இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?”  என்று சந்தேகம் வந்தது. பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டது. ஒருநாள் அந்தக் கழுகு “”இன்று எனக்கு உணவு கிடைக்குமா? இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே…” என்று யோசித்தது. உணவு கிடைக்குமா …

More

மார்கெட்டிங் ட்ரெயினிங்

​ ஒரு பிரபல ஏற்றுமதி நிறுவனம். அதன் மார்கெட்டிங் பிரிவுக்கு தலைமை அதிகாரியாக ஒரு தகுந்த நபரை தேர்வு செய்யவேண்டியிருந்தது. எந்த ஒரு நிறுவனத்திற்கும் மார்கெட்டிங் பிரிவு என்பது முதுகெலும்பு போல. வருவாய் ஆதாரங்களை கொண்டு வருவது அதன் பணி என்பதால் தகுந்த ஒருவரை எவ்வளவு சம்பளம் கொடுத்தேனும் அந்த பிரிவில் பணியில் அமர்த்த அதன் நிறுவனர் முடிவு செய்தார். நல்ல நிறுவனம், நல்ல சம்பளம் என்பதால் பலர் பணிக்கு விண்ணப்பித்தனர். தகுந்த ஒருவரை  தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் …

More