நீரில் மூழ்கிய நடிகர்கள்

கன்னட திரைப்பட படப்பிடிப்பின் போது, நீர்த்தேக்கத்தில் வில்லன் நடிகர்கள் 2 பேர் மூழ்கியதையடுத்து, அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 2 நடிகர்களும் சண்டைக்காட்சியில் ஈடுபடும் முன்பு அளித்த பேட்டியில் அக்காட்சி குறித்த தங்கள் பயத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம், மாகடி வட்டம், திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்தில், திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் துனியா விஜய் கதாநாயகனாக நடிக்கும் மஸ்திகுடி கன்னட திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இறுதிக் …

More