புவிசார் குறியீடு

ஒரு குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு அவற்றின் தனித்தன்மைக்காக இத்தகைய புவிசார் குறியீடு (ஜியாகிரபிக்கல் இண்டிகேஷன்) அளிக்கப்படும். உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா அதில் உள்ள ஒப்பந்தப்படி இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது. இக்குறியீடு, அந்த பொருளின் சொந்த இடத்தின் தரத்தையும், நன்மதிப்பையும் பறை சாற்றும் சின்னமாக விளங்கும். இந்தியாவில் பாரம்பரியம் மிக்க பொருட்களுக்கு, மத்திய அரசு அங்கீகாரம் அளித்து பாதுகாக்கிறது. இச்சட்டம் 1999ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, செப்.15, 2003ம் ஆண்டு அமலுக்கு வந்தது …

More