Jallikattu

 
 

மிரண்டது காளை; அரண்டது போலீஸ்  

 மதுரை: பாலமேட்டில் கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட காளைகள் மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட் தடை காரணமாக மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டுக்கு காளைகளை விட வேண்டாம் என உரிமையாளர்களிடம் போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், அங்கு உள்ளூர் மக்கள் குவிந்தனர். மேலும், வெளியூரிலிருந்து வந்த ஆயிரகணக்கான மக்களும் குவிந்திருந்தனர். ஜல்லிக்கட்டுக்கு தடையை கண்டித்து பாலமேட்டில் கடைகளில் கருப்பு கொடி கட்டப்பட்டு, முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தினர். பின்னர் காளை உரிமையாளர்கள் கோவிலுக்கு காளைகளை பூஜைக்கு அழைத்து வந்தனர். பின்னர் திருப்பி அழைத்து செல்லும் போது காளைகள் திடீரென மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், செய்வதறியாது திகைத்த போலீசார் கூட்டத்தினரைRead More


ஆந்திராவில் களைகட்டிய சேவல் பந்தயம்: 3 நாட்களில் ரூ.900 கோடி

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திர மாநிலத்தில் சேவல் பந்தயம் களைகட்டி உள்ளது. போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல் என இந்த 3 நாட்களில் மட்டும் ரூ. 900 கோடி வரை பந்தயப் பணம் வசூலாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டை போன்று ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்கு சேவல் பந்தயங்கள் பிரசித்தி பெற்றவை. ஆந்திர மாநிலத்தில் கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் சேவல் பந்தயங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், பிரபல தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் கலந்துகொள்வதால், சில இடங்களுக்கு நட்சத்திர அந்தஸ்தும் உண்டு. சேவல் பந்தயத்துக்கென்றே பிரத்யேகமாக சேவல்கள் வளர்க்கப்படுகின்றன. முந்திரி, பாதம், பிஸ்தா கொடுத்து இவற்றை வளர்க்கின்றனர். நன்கு வளர்க்கப்பட்ட சேவல்களை விலைக்கு வாங்கியும் பந்தயத்தில் பங்கேற்கின்றனர். ஒரு பந்தய சேவல் தற்போது ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம்Read More


ஜல்லிக்கட்டுக்கு தடை… மாட்டிறைச்சிக்கு அனுமதி சரியா?- சத்குரு

தமிழக இளைஞர்களுக்கு நன்மை பயக்கும் ஜல்லிக்கட்டு தடை கோருபவர்கள், மாட்டிறைச்சி வியாபாரத்தை மட்டும் அனுமதிப்பது சரியா? என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பெண்ணுக்கு அழகு எப்படியோ, ஆணுக்கு வீரம் அப்படி. தினசரி வாழ்வில் தங்களது வீரத்தையும், செயல்திறனையும், ஆற்றலையும் வெளிப்படுத்த கிராம இளைஞர்கள் தங்களுக்கு இருந்த வழிவகைகளை இன்று இழந்திருக்கிறார்கள். தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, தமிழ் இளைஞர்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாய் இருந்தது. உடலுறுதி. திறமை, துரிதமாய் செயல்படும் குணம், போட்டி போடக்கூடிய பலம் யாவும் ஜல்லிக்கட்டு விளையாட தேவையான அடிப்படை குணங்கள். இதனால் மது, போதைப் பொருள் போன்ற தீயப் பழக்கங்களில் கிராமப்புற இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். நம் கலாச்சாரத்தில் மாட்டினை நாம் வெறும் விலங்காகRead More


பணிந்தது மத்திய அரசு – ஜல்லிகட்டை அனுமதித்து அவசர சட்டம் ?

ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக நடக்கும்ம் போராட்டங்களை கண்டு மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டத்தை பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி காளைகளை காட்சி படுத்துதல் பட்டியலில் இருந்து மத்திய அமைச்சகம் நீக்கியது.பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.உச்சநீதிமன்றமும் அதை உறுதிபடுத்தியது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. தமிழகத்தின் விவசாய உற்பத்தி மற்றும் பால் உற்பத்தி தொழிலில் ஆதிக்கத்தை செலுத்த அமெரிக்க நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் முயற்சியின் வெளிப்பாடே ஜல்லிகட்டுக்கு எதிரான தடை என்று தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கடந்த ஒருவர காலமாக பேஸ்புக்,வாட்ஸ்-அப்,டுவிட்டர்Read More


மணப்பாறையில் இறைச்சி கடைக்கு விற்கப்பட்ட காளைக்கன்று ஜல்லிக்கட்டு ஆர்வலர் விலை கொடுத்து வாங்கி சென்றார்

மணப்பாறை, மணப்பாறையில் நடைபெற்ற சந்தையில் இறைச்சி கடைக்கு விற்கப்பட்ட காளைக்கன்றை ஜல்லிக்கட்டு ஆர்வலர் ரூ.450 கொடுத்து வாங்கி சென்றார். கன்றுக்குட்டி மணப்பாறையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை மாட்டுச்சந்தை நடைபெறும். தற்போது ஜல்லிக்கட்டுக்கான தடை நீடித்து வருவதால் பலரும் தங்களின் ஜல்லிக்கட்டு காளைகளை சந்தைக்கு கொண்டு வந்து அடிமாடுகளாய் விற்று வருகின்றனர். இந்நிலையில் சந்தைக்கு பிறந்து சில நாட்களே ஆன ஜல்லிக்கட்டு காளை இனத்தை சேர்ந்த கன்றுக்குட்டி ஒன்று விற்பனைக்கு வந்தது. அதை இறைச்சி கடைக்காக வாங்கி சிலர் கட்டி வைத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், அந்த கன்றுக்கட்டி இறைச்சிக்கடைக்கு விற்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அதில் ஒருவரான பெரியகுளத்துப்பட்டியை சேர்ந்த ஜோசப் ஸ்டாலின் பிரபு என்பவர், இறைச்சிக்கடைக்காரர்களிடம் ரூ.450 கொடுத்து, அந்த கன்றுக்குட்டியை வாங்கி வீட்டிற்கு கொண்டுRead More


இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் .. சொல்வது சாமி

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து மாடுகள் விரைவில் நீக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சட்டத்தில் எந்த வித தடையும் இல்லை என்று அவர் கூறினார். கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், பாதுகாக்கப்பட்ட விலங்குகள் தொடர்பாக ஒரு அறிவிக்கையை வெளியிட்டனர் என்றும் அந்தRead More