iris

 
 

உணர்ச்சிகளைப் பொருத்து

உணர்ச்சிகளைப் பொருத்து நம் கருவிழிகள் விரியும் நம் கருவிழி ஒளிக்கு மட்டுமல்லாது உடலின் உள்ளே நடக்கும் உணர்ச்சி மற்றும் மன மாற்றங்களாலும் விரிகிறது. கருவிழியின் அளவைக் கொண்டு உளவியல் சார்ந்த விஷயங்களை விஞ்ஞானிகள் அலசுகின்றனர். கண்கள் விரிவதற்கான காரணம் தெரியாமலேயே இவையனைத்தும் செய்து கொண்டிருக்கின்றனர். “கருவிழியின் அளவு மாறுபட்டால் என்ன அர்த்தம் என்று யாருக்குமே தெரியாது” என்று ஸ்டூவர்ட் ஸ்டீன்ஹார் கூறுகிறார். இவர் பிட்ஸ்பர்க் மருத்துவ கல்லூரியின் உயிர் அளவியல்(Biometrics) ஆராய்ச்சி கூடத்தின் நிர்வாகி. நாம் பார்க்கும் படங்களைப் பின்னந்தலையில் இருக்கும் பார்வைப்புறணி பகுதி ஒன்று சேர்க்கிறது. நரம்பு மண்டலத்தின் மற்றொரு பகுதி, கருவிழியை சரிப்படுத்தும் பணியைச் செய்கிறது. இந்தப் பகுதி, இதயத் துடிப்பு, வியர்த்தல் போன்று நம் உணர்வுக் கட்டுப்பாட்டில் அல்லாத செயல்களைச் செய்கிறது; ஒளியின் அளவைப் பொருத்து கருவிழிப்படலத்தின்(iris) இயக்கத்தை நிர்ணயிக்கும் பணியையும் செய்கிறது.Read More