Innova sampath

 
 

நாஞ்சில் சம்பத் மானஸ்தன் என்கின்ற நான்….

சசிகலா தலைமையை ஏற்க முடியாது’ என பகிரங்கமாகப் பேட்டியளித்த அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தற்போது சசிகலாவை சந்திக்கக் காத்திருக்கிறார். ‘தொடக்கத்தில் எங்கள் பேச்சுவார்த்தைகளுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை. நிலைமையைப் புரிய வைத்ததும், கழகத்திற்காக பணியாற்ற சம்மதித்தார்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. அ.தி.மு.க.வின் சீனியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவரை வரவேற்றபோதும், வாழ்த்துச் சொல்வதற்கு நாஞ்சில் சம்பத் செல்லவில்லை. ‘ தி.மு.க.வில் இணைவதற்காக சேகர்பாபு எம்.எல்.ஏ மூலமாக பேசிக் கொண்டிருக்கிறார்’ என்ற தகவல் வெளியானது. அடுத்ததாக, ‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம்; ஜெயலலிதா இடத்தில் சசிகலாவை அமர்வதைப் பார்க்க முடியவில்லை’ என்றெல்லாம் பேசி வந்தார். கூடவே, ஜெயலலிதா கொடுத்த இனோவா காரையும் ஒப்படைத்தார். ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில்,Read More


சசிகலா தலைமைக்கு குட்பை

அ.தி.மு.க மேடைகளில் இதுவரை ஜெயலலிதா புராணம் பாடி வந்த நாஞ்சில் சம்பத்… இப்போது, ‘சசிகலா புகழ்பாட தயாராக இல்லை’ என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். அ.தி.மு.க-வுக்கு குட்பை சொன்ன அவர் இனி எங்கே செல்வார்? தி.மு.க மேடைகளில் முழங்கி வந்த நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க என்றொரு கட்சியை வைகோ தொடங்கியபோது அவரோடு சென்று அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ஊர் ஊராகச் சுற்றி வந்தார். 19 ஆண்டுகள் வைகோவின் நிழலாக வலம் வந்து கொண்டு இருந்த நாஞ்சில் சம்பத், 2012-ம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து வெளியேறினார். அப்போது அ.தி.மு.க தரப்பில் இருந்து நாஞ்சில் சம்பத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தி.மு.க.விலும் பேசினார்கள். ‘அரசியல் மேடையே வேண்டாம். இலக்கியம் பேசி இனி இருக்கும் எஞ்சிய நாட்களை கழிக்கப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு நிறைய பட்டிமன்ற கூட்டங்களில் பிஸியானார். ஆனால், ஆளும்கட்சியாகRead More