Hospital

 
 

சிசேரியன் அதிகரிப்புக்கு என்ன காரணம்?

வலியில்லாமல், காத்திருக்கத் தயாரில்லாமல் மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பதால் சிசேரியன் செய்ய அவர்களே முன் வருகிறார்கள்.   இந்த நல் உலகுக்கு ஒரு புது உயிரைக் கூட்டி வருகிற தலைமுறை உருவாக்கத்தின் ஆதாரமே பிரசவம்தான். தனக்கென ஓர் உயிரை ஈன்றெடுக்கையில்  ஏற்படும் வலி கூட சுகமான வலிதான். இரு தலைமுறைகளுக்கு முன் பெரும்பாலும் வீட்டிலேயேதான் குழந்தை பெற்றுக் கொண்டனர். குடும்பக் கட்டுப்பாட்டுக்  கொள்கை மற்றும் கருத்தடைச்சாதனங்கள் இல்லாத அக்காலத்தில், 10 குழந்தைகளுக்கும் மேல் பெற்ற போதிலும், 80 வயது தாண்டி ஆரோக்கியமாக வாழும் பலர் இன்னமும் இருக்கிறார்கள்.  இதற்கு அடுத்த தலைமுறையினர்தான் பிரசவத்துக்கு மருத்துவமனைகளை நாடிச் சென்றனர். அவற்றில் பெரும்பான்மை சுகப்பிரசவம்தான். இந்தத்  தலைமுறையில்தான் சுகப்பிரசவம் என்பதே அரிதாகி, சிசேரியன் நம் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டது.Read More


4 கால்கள், 2 பிறப்பு உறுப்புடன் ஆண் குழந்தை

கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் புலந்தின்னி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சென்னபசவா (26), லலிதம்மா (23) தம்பதி. கர்ப்பமாக இருந்த லலிதம்மாவுக்கு அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு 4 கால்களும் 2 பிறப்புறுப்புகளும் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதையடுத்து, பிரசவம் பார்த்த மருத்துவர் விருபக் ஷா அறிவுரை யின்பேரில், அந்தக் குழந்தையை பெல்லாரியில் உள்ள விஜயநகர மருத்துவ அறிவியல் கழகத் தின் (விஐஎம்எஸ்) பச்சிளங் குழந்தைகள் பிரிவில் அனுமதித் துள்ளனர். அங்கு குழந்தைக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழந்தை எங்களுக்கு இறைவன் கொடுத்த பரிசு எனக் கூறி விஐஎம்எஸ் மருத்துவமனைக்கு அனுப்ப லலிதம்மா மறுத்துள்ளார். பின்னர் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அறிவுரை கூறியதையடுத்து உயர் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.