HomeGarden

 
 

வீட்டு தோட்டத்தை கோடையில் காப்பது எப்படி

கோடை காலம் ஆரம்பித்தாலே வீட்டுத் தோட்டப் பிரியர்கள் மத்தியில் ஒருவித கலக்கம் தோன்றும். வெப்ப அளவு, அனல் காற்று, குறைந்து வரும் கோடை மழை, தண்ணீர் பற்றாக்குறை, கோடை விடுமுறையில் குடும்பச் சுற்றுலா மற்றும் விசேஷங்கள் என்று நீண்டப் பட்டியல் இருக்கும். இவற்றை சமாளிப்பதற்குள் பாடுபட்டு சேகரித்த அரிய வகை செடிகளை எவ்வளவு இழக்கப் போகிறோம் என்ற எண்ணம் மேலோங்கும். சில முன்னேற்பாடுகள், செயல்முறைகள் கோடையை எளிதாக எதிர் கொள்ள உதவும் என்கிற தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட், அவற்றை விரிவாக விளக்குகிறார். வறட்சியை தாங்கி வளரும் செடிகளை தவிர மற்றவற்றை கோடை காலத்தில் தவிர்த்தல் வேண்டும். செடிகளின் எண்ணிக்கையை குறைப்பது ஒரு வழி. செடிகள் அனைத்தையும் நெருக்கமாக நிழல் பகுதி அல்லது மர நிழலில் வைத்துப் பராமரித்தால் ஈரத்தன்மை பாதுகாக்கப்படும். மாடியில் தொட்டிகள் வைத்து பராமரித்தால், சுவரிலிருந்துRead More


மாடித் தோட்டம்

வீட்டில் தனியாக இருக்கும் இல்லதரசிகள் மாடித் தோட்டம் அமைப்பதால், மன அழுத்தம் குறைகிறது என, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் துறைத் தலைவர் சாந்தி கூறினார். கட்டட காடுகளில் விவசாயம்: உலகில் வளர்ச்சி அடைந்த பல்வேறு நாடுகளில், மாடித் தோட்டம் என்ற நகர விவசாயம் வளர்ச்சி அடைந்து வருகிறது. உலக வெப்பமயமாதலைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், அலுவலகங்களில் மாடித் தோட்டம் அமைப்பதை கட்டாயமாக்கி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் மாடித் தோட்டம் அமைக்க வேண்டிய அவசியத்தையும், பயன்களையும் உணரும் வகையில் மாடித் தோட்டம் அமைக்க, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தினர் பயிற்சி அளித்து வருகின்றனர். எல்லாராலும் முடியும் எளிய வகையில் அமையும் இத்திட்டத்தில், இதுவரை 15 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர். உபயோகமற்றவற்றின் உபயோகம்: உபயோகப்படாது என்றுRead More


கூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி

மார்க்கெட் சென்றால் எந்த காய்கறி எந்த விலை என்று பயந்து கொண்டே கேட்க  வேண்டி இருக்கிறது! இந்த வாரம் தக்காளி விலை அதிகம் என்றால் போன வாரம் வெங்காயம் விலை அதிகம்! விளைப்பு குறைந்ததும், வெகு தூரத்தில் இருந்து காய்கறி கொண்டு வருவதால் அதிகரிக்கும் செலவும் காய்கறி விலை ஏற்றத்திற்கு காரணம்.. அபர்ட்மெண்ட் மொட்டை மாடிகளில் இந்த மாதிரி கூரை தோட்டம் போட்டு காய்கறி விளைவித்தால் நல்ல தரமான காய்கறி நமக்கு கிடைக்கும்.. இதோ கூரை தோட்டம் பற்றிய செய்தி…. கூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி சூலூர் ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூரை தோட்டத்தில் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் காய்கறி விளைச்சல் களைகட்டுகிறது. சந்தைகளில் விற்பதை விட 10 சதவீதம் விலை அதிகமாக இருந்தாலும், ரசாயன கலப்பில்லாத இந்த காய்கறிகளை மக்கள் விரும்பி வாங்கிRead More


வீட்டுத் தோட்டத்தைப்
பாதுகாப்பது எப்படி?

வீட்டுத் தோட்டங்களைப் பராமரிப்பது என்பது தனிக் கலை. காலையில் எழுந்து செடி, கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது மட்டும் பராமரிப்பு அல்ல. செடிகள் காயாமலும் வதங்காமலும் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். பூச்சு தொற்று ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். இதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. இதுபற்றி வழிகாட்டுகிறார் தோட்டக்கலை வல்லுனர் அந்தோணி ராஜ். தொற்று தவிர்க்க..
‘’தோட்டத்தில் உள்ள செடிகளைக் குழந்தைகளைப் போலப் பராமரிக்க வேண்டும். அவற்றில் பூச்சி தொற்று ஏற்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்து விட வேண்டும். குறிப்பாகப் பல வீட்டுத் தோட்டத்தில் காணப்படும் செம்பருத்திச் செடிகளில் ‘மீலி பெக்’ என்ற பஞ்சு பூச்சி தாக்குதல் இருக்கும். இது பார்ப்பதற்கு வெள்ளை பொடி போல இருக்கும். இப்பூச்சி தாக்குதலில் இருந்து இச்செடிகளைக் காக்க ரோகர் அல்லது மாலத்தியான் ரசாயனப் பூச்சிக் கொல்லி மருந்துடன் வேப்ப எண்ணையைச் சரி சமமாகRead More


வீட்டுத் தோட்டங்களைப் பாதுகாக்க எளிய பாசன தொழில்நுட்பம்

கோக், பெப்சி பாட்டில் பாட்டில்களை வைத்து எளிமையான ஒரு சொட்டு நீர் பாசனம் வழி அமைத்து இருக்கிறார்கள்  நிகாரகுவா (Nicaragua) நாட்டில்.  இப்போது, கேரளத்திலும் இந்த முறையை பயன் படுத்துகிறார்கள். இதோ அதை பற்றிய செய்தி: கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. மழை போதிய அளவு பெய்யாத நிலையில் கடும் வெப்பம், வீடுகளில் உள்ள தோட்டங்களை கடுமையாக பாதித்து வருகிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் காய்கறித் தோட்டம் அமைத்திருப்பவர்கள், அலங்காரச் செடிகளை நடவு செய்துள்ள இல்லத்தரசிகள் மற்றும் குழந்தைகள் தங்களது தோட்டங்கள் அழிந்து வருவதை வேதனையுடன் காணும் சூழல் உள்ளது. மின்வெட்டு பிரச்னை காரணமாக ஏற்படும் நீர் பற்றாக்குறை சூழலும், வீட்டுத் தோட்டங்களுக்கு தேவைப்படும் அதிகளவு நீர்ப் பாசன தேவையை நிறைவு செய்ய உதவுவது கிடையாது. இத்தகைய நடைமுறை சூழலில் வீட்டுத் தோட்டங்களில்Read More


எளிமையான சொட்டு நீர் பாசனம்

இப்போதெல்லாம் நாம் எல்லா இடங்களிலும் கோக், பெப்சி பாட்டில்களை பார்க்கிறோம். குடித்த பின் இந்த லிட்டர் பாட்டில்களை தூக்கி போட்டு விடுகின்றனர். இந்த பாட்டில்களை வைத்து எளிமையான ஒரு சொட்டு நீர் பாசனம் வழி அமைத்து இருக்கிறார்கள்  நிகாரகுவா (Nicaragua) நாட்டில்.   ஒரு2 லிட்டர் பாட்டில் எடுத்து, கீழே ஒரு ஓட்டை போட வேண்டும். இந்த பாட்டிலை ஒரு குச்சியில் கட்டி வைக்க வேண்டும். கிழே பார்த்து இருக்கும் பாட்டில் மூடியை சரியாக திருப்பி வைக்க வேண்டும். இப்போது பாட்டிலை நிரப்பினால், சொட்டு நீர் பாசனம் ரெடி. இவ்வாறாக ஊற்ற படும் நீர் ஒரு நாள் முழுவதும் வரும். தேவைக்க ஏற்ப மூடியை திறந்து கொள்ளலாம். மாலையில் நீர் நிரப்பினால், இரவு முழுவதும் சொட்டும். மாட்டு சாணம் அல்லது எரு போட்டு வைத்தால் அவை மெதுவாகRead More