Hillary

 
 

அமெரிக்க அதிபரை எப்படித் தேர்வுசெய்கிறார்கள்?

அமெரிக்க அதிபர் தேர்தல், பலரும் நினைப்பதைப் போல நேரடியான வாக்களிப்பு மட்டும் அல்ல. அதிபர் வேட்பாளர், நாட்டின் ஒட்டுமொத்தப் பதிவான வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளை வாங்கினால் மட்டும் போதாது. அவர், மாகாணங்களில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் ‘தேர்வு செய்வோர் அவை’யிலும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற வேண்டும். ஒவ்வொரு மாகாணத்திலும் அதன் வாக்காளர் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த ‘தேர்வு செய்வோர் அவை’யின் உறுப்பினர்கள் இருப்பார்கள். எல்லா மாகாணங்களும் சேர்ந்து மொத்தம் 538 உறுப்பினர்கள். இவர்களில் 270 உறுப்பினர்களின் வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற்றால்தான் வெல்வார். நாட்டில் பதிவான வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று, அதே சமயத்தில் சில மாகாணங்களில் தோற்றதன் மூலம், இந்த ‘தேர்வு செய்வோர் அவை’ வாக்குகளில் தேவைப்படும் 270 வாக்குகளைப் பெற முடியாமல் தோற்றவர்களும் உண்டு. 2000-ல் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிராகப் போட்டியிட்ட அல் கோர் இப்படித்தான்Read More