Heart Attack

 
 

உப்பு குறைவாக சாப்பிட்டால் …..

நாள் ஒன்றிற்கு 5 கிராம் அளவு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் கூடுதலாக உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் என கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலை.,யில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, நாள் ஒன்றுக்கு 3 கிராம் சோடியம் உடலில் கலக்க வேண்டும். அதற்கும் குறைந்தால் மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தின் செயல்பாடுகள் நின்று உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். நாள் ஒன்றுக்கு 7.5 முதல் 12.5 கிராம் உப்பு எடுத்தால் தான் 3 அல்லது 5 கிராம் சோடியம் பெற முடியும். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்தால் உடல் நலம் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


முதல்வருக்கு வந்தது மாரடைப்பல்ல… இதை படியுங்கள்

மாரடைப்பு என்பதும் கார்டியாக் அரெஸ்ட் என்பதும் பொதுவாக ஒரே மாதிரியான அர்த்தத்தில் நம்மால் சொல்லப்படுகின்றன.  ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல. முதல்வருக்கு மாரடைப்பு என்று தவறாக சொல்லப்படுகிறது. மாரடைப்பு அல்லது ஹார்ட் அட்டாக் என்பது இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்படுவது. கார்டியாக் அரெஸ்ட் என்பது அப்படிப்பட்டதல்ல.  கார்டியாக் அரெஸ்ட் என்பது இதயம் வழக்கத்திற்கு மாறாக இயங்குவதையும் எதிர்பாராத நேரத்தில் திடீரென துடிப்பை நிறுத்துவதும் ஆகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மாரடைப்பு என்பது இரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றம் – கார்டியாக் அரெஸ்ட் என்பது இரத்த ஓட்டத்தில் நிறுத்தம்.   மாரடைப்பு என்பது என்ன: இதயத்தில் உள்ள தமனி ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை இதயத்திற்குப் போக விடாமல் தடுப்பது தான் மாரடைப்பு அல்லது ஹார்ட் அட்டாக் என்று சொல்லப்படுகிறது.  இந்தத் தமனியை மருத்துவ உதவியுடன் திறந்துRead More


கோல்டன் ஹவர் திட்டம்

பொதுவாக விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களின் உயிரைக் காக்க, விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து மருத்துவமனைக்குச் சென்றடையும் நேரத்தை ‘கோல்டன் ஹவர்’ என்று அழைக்கிறார்கள். மருத்துவமனைகளில் யாராவது உயிரிழக்கும்போது, ‘அரைமணி நேரத்துக்கு முன்பே கொண்டு வந்திருந்தால் பிழைத்திருப்பார்’ என மருத்துவர்கள் கூறும்போதுதான் ‘கோல்டன் ஹவரின்’ அருமையும், அதன் அவசியமும் புரியும். விபத்தில் சிக்கி உடனடியாக இறப்பவர்களைவிட, முதலுதவி கிடைக்காமல் இறப்பவர்களே அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இருந்தாலும் திடீரென்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கும் உடனடி சிகிச்சை வழங்கி காப்பாற்றுவதற்காக ‘கோல்டன் ஹவர்’ என்ற திட்டத்தைச் சோதனை அடிப்படையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை, கோவை கே.எம்.சி.எச். ஆகிய இடங்களில் மட்டும் தமிழக அரசு கொண்டு வந்தது. ஓர் இடத்தில் ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு வரும்போது அவரை அருகில் உள்ள ஆரம்பRead More


மிளகாய்ப்பொடி Heart Attack

​கடந்த 35 வருடங்களில் Heart Attack பாதிப்பால் தம்மை நாடிய ஒருவர் கூட உயிரிழந்ததில்லை என சவால் விட்டு கூறுகிறார் இயற்கை மருத்துவர் ஜான் கிரிஸ்டோபர். மாரடைப்பு ஏற்பட்டவுடன் 60 செக்கன்டுகளில் காப்பாற்றும் வீட்டு மருந்து தன்னிடம் இருப்பதாகவும் சொல்கிறார். மிளகாய்ப்பொடி எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். ஒரு டீ ஸ்பூன் மிளகாய்பொடியை மிதமான தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் நினைவுடன் இருந்தால் சிறிதளவு மிளகாய் பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும். இது ஒரு முதலுதவி மருந்துபோன்றது. சற்று முன்னேற்றம் ஏற்பட்ட உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த மருத்துவம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்கள் என்பதை முற்றிலுமாக தடுக்க கூடியதாகும். அதாவது மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது மருத்துவமனைக்கு செல்லும் வரையில் ஆபத்தை ஏற்படுத்தாமல் பாதுகாக்க கூடியதாக இருக்கும்.Read More