HCL

 
 

ஐடி வேலை – டிகிரி தேவையில்லை

+2 முடித்தவுடன் ஐடி வேலையில் சேருவதற்கான வாய்ப்பினை ஹெச்.சி.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. கல்லூரிப் படிப்பினை முடிக்காமலே பொறியாளர் ஆவதற்கான வாய்ப்பு இந்திய மாணவர்களுக்குக் காத்திருக்கிறது. கல்லூரிக்கு நேரடியாகச் சென்று ’கேம்பஸ் இன்டர்வியூ’ நடத்தி வேலைவாய்ப்பினை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் பள்ளிக்கல்வி முடித்தவுடன் நேரடியாக ஐடி வேலையில் சேருவதற்கான வாய்ப்பினை ஹெச்.சி.எல். அறிவித்துள்ளது. இதன்படி +2 பொதுத் தேர்வில் 85% , சிபிஎஸ்இ- 80% மேல் வாங்கும் சிறந்த 200 மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவிருக்கிறது. நாடு முழுவதிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் இந்த 200 மாணவர்களுக்கும் ஒன்பது மாத கால பயிற்சி வழங்கி நிறைவில் ஆண்டுக்கு 1.8 லட்சம் சம்பளத்தில் பணி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இந்த ஒன்பது மாதகால பயிற்சியில் அடிப்படை பொறியியல் கல்வி, மென்பொருள் தேர்வு போன்ற அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் மாணவர்கள் விரும்பினால் விடுமுறைக் காலங்களில் பகுதி நேரRead More


உலக கோடீஸ்வரர் பட்டியலில் ஒரே ஒரு தமிழர்

உலக அளவில் இருக்கும் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. 2017-ம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில்  முதல் 250 இடத்தில் இந்தியாவில் இருந்து பத்து பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் நம் நாட்டைச் சேர்ந்த ஒரே ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளார். அவர்தான் 102-வது இடத்தைப் பிடித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் சிவ நாடார். இவரது சொத்து மதிப்பு 12.3 பில்லியன் டாலர்.   சிவ நாடாரின் சொந்த ஊர் திருச்செந்தூரிலிருந்து சுமார் பத்து கி.மீட்டர் தொலைவில் உள்ள மூலைப்பொழி. 1945-ல் இந்த ஊரில்தான் பிறந்தார் சிவ நாடார். அப்பா சுப்பிரமணிய நாடார் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி. அம்மா, வாமசுந்தரி தேவி. இவர், தினத்தந்தி நாளிதழைத் தொடங்கிய சி.பா.ஆதித்தனாரின் உடன்பிறந்த சகோதரி. சிவ நாடார் தனது  பள்ளிப்படிப்பு முழுக்க முழுக்க தமிழிலேயே படித்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் உயர்Read More