Happy vishu day

 
 

விஷூ

விஷு (Vishu, மலையாளம்: വിഷു) தென் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இது பிசு என்ற பெயரில் கர்நாடகாவின் துளுப்பகுதியிலும், தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. இது மலையாளப் புத்தாண்டைக் குறிக்கும் பண்டிகையாகும். இது மேடம் (ஏப்ரல் – மே) மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. விஷஷு கோள்களின் நிலை கொண்டு இளவேனில் சமதின நாள் ஏற்படும் போது அதாவது கிரிகோரியன் வருடத்தின் படி ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சூரியன் இந்திய சோதிட கணக்கின் படி இராசி மண்டலத்தில், மேஷ இராசி க்குள் நுழைகிறார் (முதலாவது ராசி ). விஷு என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் “சமம்” என்று பொருள். வருடத்தின் ஓர் சமதின நாளைக் குறிப்பதாலேயே அவ்வாறு அழைக்கப் பெற்றிருக்கலாம். இது அறுவடை பண்டிகையாக கேரளாவில் கொண்டாடப்படுவதால் எல்லா மலையாளிகளுக்கும் இது முக்கியமானRead More