Greetings card

 
 

காணாமல் போன வாழ்த்து அட்டைகள்

நிறைய அட்டைகளை வாங்கி அதில் வாழ்த்தாய் சில கவிதை வரிகளை எழுதி முகவரி சரிபார்த்து அஞ்சல் நிலையம் சென்று ஸ்டாம்ப் வாங்கி அங்கிருக்கும் பசையை எடுத்து  நேர்த்தியாய் ஒட்டி அனுப்பி விட்டு வருவோம். அதில்தான் எத்தனை சந்தோஷம். அண்ணனுக்கு..அக்காவுக்கு..மாமாவுக்கு ..மச்சானுக்கு, தம்பிக்கு உறவினர்களுக்கு நண்பர்களுக்கு,தோழிகளுக்கு,அண்ணன் குழந்தைகளுக்கு, அக்கா குழந்தைகளுக்கு என தரம் பிரித்து அனுப்பி வைப்போம். தபால்காரர் வாழ்த்து அட்டைகளை குடுக்கும்போது, யார் அனுப்பி இருக்கா என்ன படம் அனுப்பியிருக்கார் என பிரித்துபார்த்து அடையும் சந்தோஷமே தனி. அந்த வாழ்த்துக்கள் கொடுத்த சந்தோஷத்தினை இன்றைய வாழ்த்து முறை கொடுக்கின்றதா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால்,இன்று வாழ்த்து அட்டைகளை அனைவரும் மறந்துவிட்டனர். இன்றைய தலைமுறைகளும், வருங்கால தலைமுறைகளும் அதைப்பற்றி அறியாமலே உள்ளனர். அன்பு, நேசத்துடன், நட்பையும், உறவையும் வளர்த்து வாழ்த்து அட்டைகளை தபால் மூலம்Read More