golden hour

 
 

கோல்டன் ஹவர் திட்டம்

பொதுவாக விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களின் உயிரைக் காக்க, விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து மருத்துவமனைக்குச் சென்றடையும் நேரத்தை ‘கோல்டன் ஹவர்’ என்று அழைக்கிறார்கள். மருத்துவமனைகளில் யாராவது உயிரிழக்கும்போது, ‘அரைமணி நேரத்துக்கு முன்பே கொண்டு வந்திருந்தால் பிழைத்திருப்பார்’ என மருத்துவர்கள் கூறும்போதுதான் ‘கோல்டன் ஹவரின்’ அருமையும், அதன் அவசியமும் புரியும். விபத்தில் சிக்கி உடனடியாக இறப்பவர்களைவிட, முதலுதவி கிடைக்காமல் இறப்பவர்களே அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இருந்தாலும் திடீரென்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கும் உடனடி சிகிச்சை வழங்கி காப்பாற்றுவதற்காக ‘கோல்டன் ஹவர்’ என்ற திட்டத்தைச் சோதனை அடிப்படையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை, கோவை கே.எம்.சி.எச். ஆகிய இடங்களில் மட்டும் தமிழக அரசு கொண்டு வந்தது. ஓர் இடத்தில் ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு வரும்போது அவரை அருகில் உள்ள ஆரம்பRead More