gold medal

 
 

ஜூனியர் உலக துப்பாக்கி- அஜர்பைஜான்

ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் ருஷிராஜ் தங்கம் வென்றார் அஜர்பைஜான் – ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில் 25 மீட்டர் ரெபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ருஷிராஜ் தங்கம் வென்றார். ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் 25 மீட்டர் ரெபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ருஷிராஜ் ரோத் தங்கம் வென்றார். 6 பேர் பங்கேற்ற இறுதிப் போட்டிக்கு அவர் 5-வது இடத்தை பிடித்து முன்னேறி தங்கம் வென்று அசத்தி உள்ளார். 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் அணி பிரிவில் இந்தியாவின் பிரதிக் போர்ஸ், அர்ஜுன் பாபுதா, பிரசாந்த் ஆகியோரை கொண்ட அணி 1849.9 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்தியா 6 தங்கம், 4Read More


உலக சாதனை

பாராலிம்பிக்ஸ் போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தையும், மற்றொரு வீரரான பாடி வருண் சிங் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் அதிகபட்சமாக 1.74 மீட்டர் உயரமே தாண்டினார். இந்த முறை, மாரியப்பன் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார். பாராலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் ஒரு தங்கம், ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா 24வது இடத்தில் உள்ளது. மாரியப்பன் தங்கவேலு, சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். 21 வயதான மாரியப்பன்Read More