Garden

 
 

பள்ளி வளாக தோட்டத்தில் காய்கறி விளைச்சல் அபாரம்

பெரம்பலூர் அரசுப்பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தில் காய்கறிகள் மிகுதியாக காய்த்துள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காய்கறித்தோட்டம் அமைத்திடும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளி வளாகங்களில் காலியாகக்கிடந்த நிலங்களை மாணவர்களைக் கொண்டே சீரமைத்து, அவற்றில் காய்கறித்தோட்டம் அமைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி மற்றும் ஆலோசனையின் பேரில் சில மாதங்களுக்கு முன்பு இத்திட்டம் தொடங்கப்பட்டது. இவ்வாறு இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகள், கீரைகள் தற்போது நன்கு விளைச்சலைத் தந்து வருகின்றன. அரசுப் பள்ளிகளில் அந்தந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுத் திட்டத்திற்குத் தேவையான காய்கறிகளே பெறப்படுவது பெற்றோர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 1. இதற்குத் தேவையான காய்கறி விதைகள் பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறைமூலம் வழங்கப்பட்டன. 2. தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் அடிக்கடி இந்த பள்ளிகளைப் பார்வையிடப்பட்டு, தேவையான ஆலோசனைகளை வழங்கிவந்தனர். 3.Read More


விண்வெளியில் கீரை

விண்வெளியில் கீரை வளர்க்கும் நாசா விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலைகோஸ் கீரை வகையை பயிர் செய்யும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். பூமியில் பயிரிடப்படுவது போல விண்வெளியில் உள்ள சரவதேச விண்வெளி நிலையத்தில் இலைகோஸ் கீரை வகையை நாசா விஞ்ஞானிகள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ தொடங்கி வைத்திருக்கிறார். இதுகுறித்து இந்த திட்டத்தின் மேலாளர் நிக்கோல் டம்பர் கூறியதாவது:- நாங்கள் எதிர்ப்பார்த்ததைவிட பணிகள் சிறிது மந்தமாகவே நடைப்பெற்றது. எனினும் அனைத்து வகை கீரைகளையும் வெற்றிகரமாக பயிர் செய்து விட்டோம். இலைகோஸ் கீரை வளர நான்கு வாரங்கள் ஆகும். அதன்பிறகு அதை அறுவடை செய்வோம். விண்வெளியில் இந்த செடிகளுக்கு குறைவான தண்ணீர் ஊற்றினாலே போது அது விரைவாக வளர்ந்து விடும், என்றார். மேலும் எதிர்காலத்தில் வேறு கிரகத்துக்கு விஞ்ஞானிகள் ஆய்வுக்குRead More


வேப்பமரம்

வேப்பமரத்தின் பல்வேறு பயன்களை , அதன் சக்திகளை , மகிமைகளை, அறிந்து பயன்படுத்தி , அனுபவங்களை உணர்ந்து , வைத்திருந்த நம்முடைய முன்னோர்கள், வேப்ப மரத்தின் பலன்கள் மனிதர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் , ஒவ்வொரு வீட்டிலும் வேப்ப மரத்தை வளர்த்து அதன் பயனை அனைவரும் பெறும் படி பல்வேறு முறைகளை வகுத்து வைத்து வந்திருக்கின்றனர் .


வீட்டு தோட்டத்தை கோடையில் காப்பது எப்படி

கோடை காலம் ஆரம்பித்தாலே வீட்டுத் தோட்டப் பிரியர்கள் மத்தியில் ஒருவித கலக்கம் தோன்றும். வெப்ப அளவு, அனல் காற்று, குறைந்து வரும் கோடை மழை, தண்ணீர் பற்றாக்குறை, கோடை விடுமுறையில் குடும்பச் சுற்றுலா மற்றும் விசேஷங்கள் என்று நீண்டப் பட்டியல் இருக்கும். இவற்றை சமாளிப்பதற்குள் பாடுபட்டு சேகரித்த அரிய வகை செடிகளை எவ்வளவு இழக்கப் போகிறோம் என்ற எண்ணம் மேலோங்கும். சில முன்னேற்பாடுகள், செயல்முறைகள் கோடையை எளிதாக எதிர் கொள்ள உதவும் என்கிற தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட், அவற்றை விரிவாக விளக்குகிறார். வறட்சியை தாங்கி வளரும் செடிகளை தவிர மற்றவற்றை கோடை காலத்தில் தவிர்த்தல் வேண்டும். செடிகளின் எண்ணிக்கையை குறைப்பது ஒரு வழி. செடிகள் அனைத்தையும் நெருக்கமாக நிழல் பகுதி அல்லது மர நிழலில் வைத்துப் பராமரித்தால் ஈரத்தன்மை பாதுகாக்கப்படும். மாடியில் தொட்டிகள் வைத்து பராமரித்தால், சுவரிலிருந்துRead More


மாடித் தோட்டம்

வீட்டில் தனியாக இருக்கும் இல்லதரசிகள் மாடித் தோட்டம் அமைப்பதால், மன அழுத்தம் குறைகிறது என, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் துறைத் தலைவர் சாந்தி கூறினார். கட்டட காடுகளில் விவசாயம்: உலகில் வளர்ச்சி அடைந்த பல்வேறு நாடுகளில், மாடித் தோட்டம் என்ற நகர விவசாயம் வளர்ச்சி அடைந்து வருகிறது. உலக வெப்பமயமாதலைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், அலுவலகங்களில் மாடித் தோட்டம் அமைப்பதை கட்டாயமாக்கி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் மாடித் தோட்டம் அமைக்க வேண்டிய அவசியத்தையும், பயன்களையும் உணரும் வகையில் மாடித் தோட்டம் அமைக்க, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தினர் பயிற்சி அளித்து வருகின்றனர். எல்லாராலும் முடியும் எளிய வகையில் அமையும் இத்திட்டத்தில், இதுவரை 15 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர். உபயோகமற்றவற்றின் உபயோகம்: உபயோகப்படாது என்றுRead More


கூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி

மார்க்கெட் சென்றால் எந்த காய்கறி எந்த விலை என்று பயந்து கொண்டே கேட்க  வேண்டி இருக்கிறது! இந்த வாரம் தக்காளி விலை அதிகம் என்றால் போன வாரம் வெங்காயம் விலை அதிகம்! விளைப்பு குறைந்ததும், வெகு தூரத்தில் இருந்து காய்கறி கொண்டு வருவதால் அதிகரிக்கும் செலவும் காய்கறி விலை ஏற்றத்திற்கு காரணம்.. அபர்ட்மெண்ட் மொட்டை மாடிகளில் இந்த மாதிரி கூரை தோட்டம் போட்டு காய்கறி விளைவித்தால் நல்ல தரமான காய்கறி நமக்கு கிடைக்கும்.. இதோ கூரை தோட்டம் பற்றிய செய்தி…. கூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி சூலூர் ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூரை தோட்டத்தில் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் காய்கறி விளைச்சல் களைகட்டுகிறது. சந்தைகளில் விற்பதை விட 10 சதவீதம் விலை அதிகமாக இருந்தாலும், ரசாயன கலப்பில்லாத இந்த காய்கறிகளை மக்கள் விரும்பி வாங்கிRead More