Fruit

 
 

வீட்டு தோட்டத்துல பழச்செடி

வீட்டுத்தோட்டத்தில் எத்தனை அழகான பூச்செடிகளை வைத்தாலும், சில நேரத்தில் அவற்றை மட்டும் பராமரித்து வந்தால், போர் அடித்துவிடும். ஆகவே பூக்களை மட்டும் தோட்டத்தில் வைக்காமல், சற்று வித்தியாசமாக உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஒரு சில பழச் செடிகளை வைத்து வளர்த்து வந்தால், அவை பூத்து, காய்த்து, கனிகளை தரும் போது, மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும், தோட்டம் மிகவும் அழகாகவும் இருக்கும். அதற்கு முதலில் எந்த வகையான பழங்களை தோட்டத்தில் வைத்தால் நல்லது என்பதை தெரிந்துக் கொண்டு, அதன் பின்னர் வைக்கலாமே!!! மாதுளை: இந்த செடியை வீட்டில் இரண்டு வகைகளில் வளர்க்கலாம். உயரம் குறைவாக வளரும் மாதுளை செடியை, வேண்டுமென்றால் தொட்டி அல்லது சாதாரணமாக தரையில் புதைத்து வளர்க்கலாம். இதற்கு குறைவான அளவு சூரிய வெப்பம் மற்றும் காற்றோட்டமான பகுதியில் நன்கு வளரும். இந்த மாதுளையை சாப்பிட்டால், இதயRead More


பலம் தரும் பலாக்கொட்டை

நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நம் பாரம்பரிய வழக்கம். அசைவ உணவை போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன. பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையைப் பெருக்கும் தன்மை உள்ளதுதான் பலாக்கொட்டை.”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக உட்கொள்ள ஏற்றது. 100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்துRead More