forest

 
 

வீடுகளில் வளர்க்க 6 தாவரங்களுக்கு தடை

அழியும் நிலையில் உள்ள உயிரி னங்களைப் பாதுகாக்கவும், பல்லு யிர் வளங்களைப் பாதுகாக்கவும் சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக இந்தியாவில் இயற்றப்பட்ட வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972-ல் வன உயிரினங்கள் எண்ணிக்கை, அவற்றின் முக்கியத்துவம் அடிப் படையில் பட்டியல்-1 முதல் பட்டியல்-6 வரை என வகைப் படுத்தப்பட்டு அவற்றை வேட்டையாடவோ, வேட்டையாட முயன்றாலோ சட்டப்படி குற்ற மாகக் கருதப்படுகிறது. இந்த 6 வகை பட்டியல்களில் தெரிவிக் கப்பட்ட உயிரினங்கள் அனைத் தும் பாதுகாக்கப்பட வேண்டிய வன உயிரினங்களாகக் கருதப்படு கின்றன. இதில், 6-வது பட்டியலில் 6 அரிய வகை தாவரங்களுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அத னால், இந்த 6 தாவரங்களும் பாது காக்கப்பட வேண்டிய வன உயிரி னங்களாகக் கருதப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட வன அலு வலரும், வன உயிரின ஆராய்ச்சி யாளருமான வெங்கடேஷ்Read More


மதுரை நகருக்குள்

தூசு நிறைந்த சூழலுக்கு மத்தியில் வன அதிகாரி ஒருவரின் உதவியுடன், வெப்பமண்டலக் காட்டில் வாழும் 50 வகை மரங்களை வளர்த்திருக்கிறார்கள் மதுரை முத்தமிழ்நகர் மக்கள். மதுரை அண்ணாநகர் கிழக்கில் உள்ள எல்.ஐ.ஜி. காலனியில், முத்தமிழ் குடியிருப்புப் பகுதியில் மாநகராட்சி பூங்கா இருக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால், வாகன நிறுத்தும் இடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் இருந்த இடம் இப்போது மூலிகைப் பூங்காவாக மாறி இருக்கிறது. தும்பை, தூதுவளை, ஓமவல்லி, கண்டங்கத்திரி, வல்லாரை, நாராயணசஞ்சீவி, கீழாநெல்லி, தும்பை என்று ஏராளமான மூலிகைகள் இங்கு இருக்கின்றன. வெப்பமண்டலக் காடுகளில் உள்ள பல அபூர்வ மரங்கள் இங்கிருப்பதுதான் இந்தப் பூங்காவின் சிறப்பு. மதுரைக்கு பெயர்க் காரணம் தந்த, மருத மரங்களையும் இங்கு பார்க்கலாம். மீனாட்சியம்மன் கோயிலின் தல விருட்சமான கடம்ப மரத்தையும் இங்கு பார்க்கலாம். மயிலடி (இதன் இலைகள் மயிலின்Read More


ஊரெல்லாம் தோட்டம்!

விருதுநகர் மாவட்டத்தின் கடைக் கோடியில் கிடக்கிறது தேவதானம் கிராமம். ஊரெங்கும் பச்சைப் பசேல் மரங்கள் கண் சிமிட்டி அழைக்கின்றன. ‘‘எல்லாம் நம்ம வெத்தலை யாவாரி தலைமலை செய்ற வேலைதான்!’’ ‘‘கோடி ரூவாயை ஒரு தட்டுலயும், ரெண்டு மரக்கன்னுகளை இன்னொரு தட்டுலயும் வெச்சு, ‘ரெண்டுல எது வேணும்?’னு கேட்டா, யோசிக்காம மரக்கன்னை எடுத்துக்கிடுற மனுஷன்!’’ என்று எல்லோரும் அடையாளம் காட்டுவது தலைமலையை! மனிதரைத் தேடிப்பிடித்தால் வெள்ளந்திச் சிரிப்புடன் வரவேற்கிறார்… ‘‘பத்து வருஷத்துக்கு முன்ன ஒரு சம்பவம். ஊருக்கு வெளியே இருக்கிற பஸ் ஸ்டாப்ல வயசான ஒரு அம்மா பஸ்ஸுக்காக நின்னாங்க. அந்த இடத்துல ஒதுங்கி நிக்க நிழல் எதுவும் இல்லைன்னு எதிர் திசையில ஒரு மர நிழலில் போய் நின்னாங்க. பஸ் வந்தப்போ, வேகமா ஓடிப் போய் பிடிக்கப் போனதுல தடுமாறி கீழ விழுந்துட்டாங்க. பஸ்ஸை அவங்களால பிடிக்கRead More